Lokesh: லோகேஷ் இப்போது சூப்பர் ஸ்டாரை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். அதேபோல் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கும் இவர் புது முகங்களுக்கு வாய்ப்புகளை கொடுத்து வருகிறார்.
அந்த வரிசையில் தற்போது youtube பிரபலமான பாரத் ஹீரோவாக நடிக்கும் படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கிறது. இப்படத்தை லோகேஷ் உடன் இணைந்து ஃபேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.
நிரஞ்சன் இயக்கும் இப்படத்தில் பாரத்துடன் இணைந்து சம்யுக்தா பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.. மிஸ்டர் பாரத் என படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.
லோகேஷின் அடுத்த பட ப்ரோமோ
இதன் ப்ரோமோ தற்போது வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. வழக்கம்போல பாரத் தன் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார்.
அதேபோல் லோகேஷின் என்ட்ரியும் வேற லெவலில் இருக்கிறது. அதிலும் இவனுங்க கிட்ட தியேட்டருக்கு தான் படம் எடுக்குறோம்னு யாராவது சொல்லி புரிய வைங்கடா.
அவனுங்க நம்ம கிட்ட மாட்டிகிட்டு இருக்காங்களா இல்ல நம்ம அவனுங்க கிட்ட மாட்டிகிட்டோமா என்ற வசனமே பட்டையை கிளப்புகிறது. படத்தில் இன்னும் எதிர்பார்க்கலாம்.
இப்படி அலப்பறையாக வெளிவந்துள்ள புரோமோ வாழ்த்துக்களை குவித்து வருகிறது. அதே போல் படம் முழுக்க முழுக்க காமெடி என்பதையும் லோகேஷ் சொல்லிவிட்டார்.
படத்துல ரத்தம் பவுடர் இந்த மாதிரி எதுவும் இருக்க கூடாது என மறைமுகமாக சொல்லி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இப்படி ரஜினி பட டைட்டிலுடன் வெளிவந்துள்ள ப்ரோமோட் வைரலாகி வருகிறது.