Vikram: பாலா, சூர்யா இருவருக்கும் இடையே வணங்கான் படப்பிடிப்பில் மன வருத்தம் ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் படத்திலிருந்து விலகினார்.
அதன் பிறகு தான் அருண் விஜய் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆனார். அதைத் தொடர்ந்து சூர்யா பாலா பிரச்சனை மீடியாவில் பல்வேறு விதமாக பேசப்பட்டது.
அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று நடந்த வணங்கான் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா கலந்து கொண்டார். அது மட்டும் இன்றி பாலாவுடன் கைகோர்த்து இருந்த போட்டோவும் வைரலாகி வருகிறது.
இன்னும் பழசை மறக்காத சீயான்
இதன் மூலம் சூர்யா எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் பெரிய மனுஷன் என்பதை உணர்த்திவிட்டார். அது மட்டும் இன்றி பாலா தனக்கு கொடுத்த வாழ்க்கையையும் நன்றி மறக்காமல் மேடையில் கூறினார்.
இது ஒரு பக்கம் இருக்க விக்ரம் ஏன் விழாவுக்கு வரவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனென்றால் பாலாவின் சேது தான் அவருக்கு மிகப்பெரும் அடையாளமாக இன்று வரை உள்ளது.
சீயான் என ரசிகர்கள் அவரை கொண்டாடுவதற்கு காரணமும் பாலா தான். அந்த நன்றி உணர்வு விக்ரமுக்கு எப்போதுமே உண்டு.
ஆனால் இந்த விழாவில் அவர் கலந்து கொள்ளாததற்கு பழைய கோபம் தான் காரணம். அதாவது விக்ரம் தன் மகனை ஹீரோவாக நினைத்தபோது பாலாவிடம் தான் வந்தார்.
அவர் இயக்கத்தில் துருவ் நடிக்கும் வர்மா படத்தின் படப்பிடிப்பு நல்லபடியாக தொடங்கியது. ஆனால் சில காரணங்களால் அது கைவிடப்பட்டது..
ஏனென்றால் அப்படத்தில் முகம் சுளிக்க வைக்கும் பல காட்சிகள் இருந்தது. அதை பார்த்து அதிர்ந்து போன விக்ரம் வேற இயக்குனரிடம் சென்று விட்டார்.
அது ஆதித்ய வர்மா என்ற பெயரில் வெளியானது. அதை தொடர்ந்து விக்ரம் பாலா மீது எவ்வளவு கோபமாக இருக்கிறார் என்ற செய்தியும் வெளியானது.
அது இன்னும் சரியாகாததால் தான் இந்த விழாவுக்கு அவர் வரவில்லை என அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது. ஒரு விதத்தில் அதுதான் உண்மை. ஆனால் சூர்யாவுக்கு இருக்கும் மனசு விக்ரமுக்கு இல்லையே என்ற ஒரு கருத்தும் இப்போது எழுந்துள்ளது.