Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜ் வாங்க போகும் வீட்டில் ஏதாவது பேய் பிசாசு இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வதற்காக மந்திரவாதியை வீட்டிற்கு வர வைக்கிறார். அந்த மந்திரவாதி வந்ததும் மொத்த குடும்பமும் மந்திரவாதியின் தோற்றத்தை பார்த்து பயத்தில் இருக்கிறார்கள். ஆனால் முத்து மட்டும் வழக்கம்போல் கேலியும் கிண்டலும் அடித்து வருகிறார்.
அந்த வகையில் மந்திரவாதி சொன்ன விஷயத்தை பொய்யாக்கும் விதமாக முத்து சில விளையாட்டுத்தனமான காரியங்களை செய்தார். ஆனாலும் அந்த மந்திரவாதி இந்த வீட்டில் பேய் எதுவும் இல்லை நீங்கள் தாராளமாக வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லி மனோஜிடம் பணத்தை வாங்கிட்டு போய் விட்டார். அடுத்ததாக முத்து, அண்ணாமலையிடம் இந்த வீட்டிற்கு பெயர் வைக்கவும் ஆள் வந்துட்டு போயாச்சு.
பேய் பிசாசு இருக்கான்னு செக் பண்ணுவதுக்கும் ஆள் வந்துட்டு போயாச்சு. அந்த வகையில் தற்போது மதியம் நேரம் ஆகிவிட்டது எல்லாருக்கும் பசிக்கும். நான் போய் கடையில் சாப்பாடு வாங்கிட்டு வருகிறேன் என்று கிளம்புகிறார். உடனே விஜயா, மீனாவை சமைக்க சொல்லுகிறார். அதற்கு சுருதி இது ஒன்னும் நம்ம வீடு கிடையாது அத்தை என்று சொல்லிய நிலையில் முத்து, அடுப்பங்கரை சாப்பாடு என்று அம்மாவுக்கு ஞாபகம் வந்துவிட்டால் உடனே மீனா பெயர் தான் வாயில் வரும்.
அந்த பழக்க தோஷத்தில் அம்மா சொல்லி இருப்பாங்க என்று சொல்கிறார். உடனே தியாகியின் மறு உருவமாக இருக்கும் மீனா, நம்ம குடும்பத்தில் இருப்பவர்களுக்காக தானே நான் சமைக்கிறேன். எனக்கு ஒன்னும் அது கஷ்டம் இல்லை என்று சொல்லிய நிலையில் முத்து நீ இப்படி பொதுநலமாக யோசிப்பதால் தான் மற்றவர்கள் உன்னை சுயநலமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். நீ கொஞ்சமாவது மாறு என்று அட்வைஸ் பண்ணுகிறார்.
பிறகு முத்து சொன்னபடி கடையில் சாப்பாடு வாங்குவதற்கு கிளம்பி விட்டார். அடுத்து எல்லோரும் ஆசைப்பட்ட மாதிரி அந்த வீட்டில் சாப்பிட்டு வீட்டை வாங்கலாம் என்று மனோஜ் முடிவெடுத்த நிலையில் என்னதான் வீடு வாங்குவதற்கு லோன் போட்டாலும் மீதி பணத்திற்கு அப்பாவிடம் கேட்கலாம் என்று ரோகினி மனோஜை தூண்டிவிடுகிறார்.
அதன்படி அனைவரும் இருக்கும் பொழுது மனோஜ், அண்ணாமலை இடம் உங்களுக்கு இருக்கும் சொத்தில் எனக்கும் பங்கு இருக்குதான. அதை இப்பொழுதே பிரித்துக் கொடுத்து விட்டீர்கள் என்றால் நான் இந்த வீட்டை வாங்கி விடுவேன் என்று கேட்கிறார். உடனே முத்து, இந்த வீட்டுக்கு ரோமையா என்று பெயர் வைத்தது போல் ரோ சொந்தமான உன் மனைவியிடம் கேட்க வேண்டியதுதானே.
அவங்க அப்பா தான் மலேசியால கோடிக்கணக்கில் பிசினஸ் பண்ணி சம்பாதிக்கிறார் தானே என்று அப்படியே அங்கு இருப்பவர்களை திசை திருப்பி விடுகிறார். உடனே விஜயா, ஆமாம் முத்து சொல்வதும் சரிதானே என்று யோசித்த நிலையில் அனைவரும் ரோகிணியை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் ரோகிணி திருட்டு முழி முழித்துக் கொண்டு பார்க்க ஆரம்பித்து விட்டார்.
மனோஜை தூண்டிவிட்டு ரோகிணி கொடுத்த ஐடியாவை அப்படியே திசை திருப்பும் விதமாக விஜயா மற்றும் முத்து சேர்ந்து ரோகினிக்கு ஆப்பு வைத்து விட்டார்கள். இதெல்லாம் என்ன ட்ரையல் தான் இனிமேல் தான் மெயின் பிக்சரை இருக்கு என்பதற்கு ஏற்ப ஜீவா வந்த பிறகு ரோகிணி மற்றும் மனோஜ் கையும் களவுமாக மாட்டப் போகிறார். அதே மாதிரி இந்த வீட்டுக்கு கொடுத்த 30 லட்சம் ரூபாயும் ஏமாந்து போய் பழைய படி பிச்சை எடுக்க போகிறார்கள்.