வியாழக்கிழமை, டிசம்பர் 19, 2024

வரம்பு மீறி ராதிகாவிடம் பேசிய இனியா.. பாக்யாவை ஐஸ் வைக்கும் கோபி, வீட்டை காலி பண்ணும் சக்காளத்தி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபியை பார்த்து பேசுவதற்காக ராதிகா பாக்யாவின் வீட்டிற்கு வருகிறார். அப்பொழுது கோபி மற்றும் இனியா பேசிக் கொண்டிருக்கும் போது ராதிகா வந்து கோபியிடம் உங்கள் உடம்பு எப்படி இருக்கிறது. இப்பொழுது பரவா இல்லையா என்று நலம் விசாரிக்கிறார். அதற்கு கோபி நல்லா சாப்பிட்டு நல்லா ரெஸ்ட் எடுக்கிறேன். அதனால் உடம்பு சரியாகிவிட்டது என்று சொல்கிறார்.

உடனே ராதிகா, அப்படி என்றால் நாளைக்கு வீட்டுக்கு வரீங்களா என்று கேட்கிறார். அதற்கு கோபி ஏன் என்னாச்சு ஏதாவது பிரச்சனையா என்று கேட்கிறார். ராதிகா பிரச்சினை எதுவும் இல்லை நாளைக்கு மயூவின் பிறந்தநாள். நீங்கள் வந்தால் மயூ ரொம்ப சந்தோஷப்படுவாள் என்று சொல்கிறார். அதற்கு கோபி, நாளைக்கு காலை இனியாவின் டான்ஸ் நிகழ்ச்சி இருக்கிறது. அதனால் அங்கே போய் விடுவேன் சாயங்காலம் வந்து மயூவை பார்க்கிறேன் என்று அவளிடம் சொல்லு என கோபி சொல்கிறார்.

அதற்கு ராதிகா, டான்ஸ் ஸ்டுடியோ எங்கே இருக்கிறது என்று கேட்கும் பொழுது கோபி சொன்ன இடம் ரொம்பவே தூரமாக இருப்பதால் ராதிகா அவ்ளோ தூரத்துக்கு போனால் மறுபடியும் ஏதாவது பிரச்சினையாகிவிடும். அதனால் நீங்கள் போவதற்கு முன் டாக்டரிடம் ஒரு வார்த்தை கேட்டு விட்டு போங்க என்று சொல்கிறார். உடனே இனியா, டாடி என் கூட நாளைக்கு வருவாங்க என்று சொல்லிய நிலையில் கோபி இனியாவின் சந்தோசம் தான் முக்கியம். அதனால் நாளைக்கு நான் போயிட்டு வந்து விடுகிறேன் என்று ராதிகாவிடம் சொல்கிறார்.

அப்பொழுது அங்கே வந்த ஈஸ்வரியிடம், நாளைக்கு என்னுடன் டான்ஸ் ஸ்டூடியோக்கு போகக்கூடாது என்று இவங்க, டாடி இடம் சொல்கிறார் என்று போட்டுக் கொடுக்கிறார். உடனே இதான் சான்ஸ் என்று ஈஸ்வரி, ராதிகாவிடம் எங்க கோபி மீது எங்களுக்கு அக்கறை இருக்கிறது நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீ கிளம்பு என்று சொல்லி அவமானப்படுத்தி பேசி அனுப்பி விடுகிறார்.

உடனே ராதிகா அங்கிருந்து கிளம்பி வெளியே போகும்பொழுது இனியா உங்க மகளை விட எனக்கு தான் எங்க டாடி மீது உரிமை இருக்கிறது. அதனால் என்னுடன் நாளைக்கு வருவாங்க என்று வாய்க்கு வந்தபடி ராதிகாவிடம் பேசுகிறார். ராதிகா நீ ஏன் என்னை விரோதி மாறி பார்க்கிறாய், நான் ஒன்னும் உங்க அப்பாவை போக வேண்டாம் என்று சொல்லவில்லை. கவனமாக இருங்க என்று சொல்லி தான் நான் பேசினேன் என்று சொல்லிநிலையில் நீங்கள் தயவு செய்து எங்க அப்பாவை விட்டு போங்க.

அப்பொழுதுதான் நாங்கள் பழைய மாதிரி சந்தோஷமாக இருப்போம். எங்க அப்பாவை விவாகரத்து பண்ணிவிட்டு எங்களை விட்டு தூரமாக போய் விடுங்க என்று ராதிகாவிடம் வரம்புக்கு மீறி பேசி வார்த்தையாலே புண்படுத்தி விட்டார். உடனே வீட்டிற்கு வந்த ராதிகா, தற்போது இருக்கும் ஓனருக்கு போன் பண்ணி நாங்க இன்னும் இரண்டு நாளில் வீடு காலி பண்ணி விடுகிறோம் என்று சொல்கிறார்.

அடுத்ததாக கோபி, பாக்யா சமைத்துக் கொண்டிருக்கும் பொழுது சாப்பாடு சூப்பர் என்று சொல்லி பாக்கியாவை பற்றி பெருமையாக பேசி ஐஸ் வைக்கிறார். இதை பிடிக்காத பாக்யா, தேவையில்லாமல் பேசி என்னுடைய நிம்மதியை கெடுக்காதீங்க. தயவுசெய்து நான் அடுப்பங்கரையில் இருக்கும் பொழுது நீங்க இங்க வராதீங்க என்று பதிலடி கொடுக்கிறார். அந்த சமயத்தில் கோபிக்கு ராதிகா சொன்ன ஓனர் போன் பண்ணி வீட்டை காலி பண்ற விஷயத்தை சொல்கிறார்.

இதை கேட்டு அதிர்ச்சியான கோபி, ராதிகாவை போன் பண்ணி வீட்டிற்கு வர சொல்கிறார். ராதிகா வீட்டிற்கு வந்த நிலையில் நீ ஏன் திடீரென்று இப்படி ஒரு முடிவு எடுத்தாய். அந்த வீட்டை விட்டுட்டு நீ வேற எங்க போகணும்னு நினைக்கிறாய் என்று சொல்லி சமாதானப்படுத்த பார்க்கிறார். ஆனால் ஈஸ்வரி மற்றும் இனியா, அவங்க போனால் போகட்டும் நீங்க எங்க கூட இங்கே இருங்க என்று சொல்கிறார்கள்.

இவ்வளவு பிரச்சினை வந்த பிறகு ராதிகா வாயை திறந்து சில உண்மைகளை சொல்ல வேண்டும். அதாவது உங்களை பார்க்க வந்தபோது உங்க குடும்பத்தில் இருப்பவர்கள் யாரும் என்னை பார்ப்பதற்கு அனுமதிக்கவே இல்லை. சட்டப்படி நான் தான் உங்களுடைய மனைவி ஆனால் அதற்கான உரிமை எதுவுமே என்னிடம் இல்லை.

உங்க அம்மா மற்றும் உங்கள் பொண்ணு என்னை விவாகரத்து பண்ண சொல்லிட்டு உங்களை விட்டு போக சொல்றாங்க. எனக்கு இதெல்லாம் தேவையா கோபி என்று எல்லா உண்மையும் போட்டு உடைத்தால் தான் இதற்கு பாக்யா முடிவெடுக்க ஒரு வாய்ப்பாக அமையும்.

Trending News