வெள்ளிக்கிழமை, டிசம்பர் 20, 2024

சிரிச்சுகிட்டு போயிட்டே இருப்போம்.. க்ரிஞ்ச் ஜோடியாக மாறிய நயன் விக்கி

Nayanthara: கடந்த மாதத்திலிருந்து நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி சோசியல் மீடியாவில் கடும் சர்ச்சைகளை சந்தித்து வருகின்றனர். அதில் தனுஷ் உடனான மோதல் தான் அதிர்வை ஏற்படுத்தியது.

இரண்டு வருடங்களுக்கும் மேலாக புகைந்து வந்த இந்த பிரச்சனையை நயன் பொதுவெளிக்கு கொண்டு வந்தார். ஆனால் அது அவருக்கே வினையாக முடிந்தது.

ஆனாலும் தன்னுடைய கெத்தை காட்டுகிறேன் என்ற பெயரில் மேலும் மேலும் நெகட்டிவிட்டியை தான் அவர் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

க்ரிஞ்ச் ஜோடியாக மாறிய நயன் விக்கி

அதில் நயன் விக்கி இருவரும் சிரித்துக் கொண்டிருப்பது போல் இருக்கிறது. அந்த வீடியோவில் என்ன நடந்தாலும் சிரிச்சுகிட்டு போயிட்டே இருப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏனென்றால் சமீபத்தில் விக்னேஷ் சிவன், பாண்டிச்சேரி அமைச்சரிடம் அரசுக்கு சொந்தமான ஓட்டலை விலைக்கு கேட்டதாக செய்திகள் பரவியது. ஆனால் அது உண்மை கிடையாது என விளக்கம் கொடுக்கப்பட்டது.

இருப்பினும் விக்கியை நெட்டிசன்கள் தொடர்ந்து கலாய்த்து வந்தனர். அதற்கான பதிலடியாக தான் இந்த வீடியோவை நயன்தாரா வெளியிட்டுள்ளார்.

இதைப் பார்த்த இணையா வாசிகள் உங்களுடைய க்ரிஞ்ச் நாளுக்கு நாள் அதிகமாயிட்டே போகுது. தனுஷ் காசை ஆட்டைய போட்டா சிரிப்பா தான் இருக்கும் என கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

Trending News