அருண் விஜய் காட்டில் இப்பொழுது அடை மழை பெய்து வருகிறது. 2025 பொங்கலுக்கு வணங்கான் படம் வெளிவர இருக்கிறது அந்த படத்திற்கு பின்னர் வரிசையாக 5 படங்களை வெளியிடுகிறார் அருண் விஜய். நடித்து முடித்த படங்கள் எல்லாம் வெளிவர போகிறது.
பார்டர்: அருண் விஜய், ரெஜினா கசான்றா போன்றவர்கள் நடித்த இந்த படம் ஒரு வருடத்திற்கு மேல் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. இப்பொழுது வணங்கான் ரிலீசுக்கு பின்னர் இந்த படம் வெளிவர இருக்கிறது. இந்த படத்தை அறிவழகன் இயக்கியுள்ளார்.
ரெட்ட தல: கிரிஷ் திருக்குமரன் இயக்கிய இந்த படமும் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. சித்தி இதானி இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஹீரோயினாக நடித்துள்ளார். இதுவும் அடுத்த லிஸ்டில் வெளிவர காத்திருக்கிறது.
இட்லி கடை: தனுஷ் இயக்கி வரும் இந்த படத்தில் அருண் விஜய் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட 70% இந்த படம் முடிந்து விட்டது. இதுவும் அடுத்த ரிலீஸ்க்கு அஸ்திவாரம் போட்டுள்ளது. இந்த படத்திற்கு இப்பொழுது அருண் விஜய் டப்பிங் பேசி வருகிறார்.
வா டீல்: அருண் விஜய், வம்சி கிருஷ்ணா, கார்த்திகா நாயர் போன்றவர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை ரத்தின சிவா இயக்கியுள்ளார். இந்த படம் சரியான வியாபாரமாகாததால் இன்று வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அக்னிச் சிறகுகள்: கடந்த அக்டோபர் மாதமே இந்த படம் ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் சரியான வியாபாரம் இல்லாததால் நிலுவையில் இருக்கிறது. இப்பொழுது பாலாவின் வணங்கான் படத்தை தான் இதுவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அருண் விஜய், விஜய் ஆண்டனி இணைந்து நடித்துள்ளனர்.
வணங்கான்: பாலா இயக்கத்தில் வெளிவர காத்திருக்கும் இந்த படத்தை வைத்து தான் மற்ற ஆறு படங்களும் ரிலீஸ் ஆக உள்ளது. அருண் விஜய் இந்த படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார். எப்படியும் ஹிட் ஆகிவிடும் என்ற எண்ணத்தில் அடுத்தடுத்த படங்களை வியாபாரம் செய்ய காத்திருக்கிறார்.