Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியா டான்ஸ் நிகழ்ச்சியில் முதல் ரவுண்டில் வெற்றி பெற்றதற்காக கோபி மற்றும் பாக்யாவை கூப்பிட்டு கௌரவமாக பேசிவிட்டார். இதனை ராதிகா, டிவியில் பார்த்த பொழுது பாக்யா மனசிலும் கோபி கூட சேர்ந்து வாழனும் என்று ஆசை இருப்பது போல் ராதிகா நினைத்து விட்டார்.
அதற்கேற்ற மாதிரி ராதிகாவின் அம்மாவும் அந்த நிகழ்ச்சியை பார்த்து கோபி மற்றும் அந்த குடும்பத்தை தவறாக சொல்லும் விதமாக ராதிகாவுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் காலிங் பெல் சத்தம் கேட்டதும் ராதிகா, மயூ மற்றும் ராதிகாவின் அம்மா அனைவரும் கோபி தான் வந்துவிட்டார் மயூவின் பிறந்தநாளுக்கு என்று சொல்லி ஆவலுடன் கதவை திறக்கிறார்.
ஆனால் மயூவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்வதற்காக பாக்யா வந்திருக்கிறார். உடனே பாக்யாவை பார்த்ததும் ராதிகாவின் அம்மா திட்ட ஆரம்பித்து விடுகிறார். பிறகு ராதிகா, பாக்யாவை உள்ளே கூப்பிட்டு பேசுகிறார். உடனே பாக்கியா, மயூ பிறந்தநாளுக்கு நான் வாழ்த்து சொல்லி கிப்ட் கொடுக்க வந்திருக்கிறேன் பண்ணலாமா என்று பெர்மிஷன் கேட்கிறார்.
அதற்கு ராதிகாவும் ஓகே என்று சொல்லிய நிலையில் மயூவை வாழ்த்தி சந்தோசமாக நல்ல படித்து நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழனும் என்று சொல்லி கையில் கொண்டு வந்த கிஃப்ட்டையும் கொடுத்துவிட்டார். பிறகு பாக்யா கிளம்பும்பொழுது ராதிகா மயூவை ரூம்குள் போக சொல்லிட்டு இனியா அடுத்த ரவுண்டுக்கு செலக்ட் ஆயிட்டாளா? என்று கேட்கிறார்.
அதற்கு பாக்கியா ஆமாம், உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்கிறார். ராதிகா, நீங்கள் அனைவரும் மேடையில் நின்று பேசியதை டிவியில் பார்த்தேன் என்று சொல்கிறார். அத்துடன் உங்களுக்கும் கோபுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் என்னிடம் ஏன் கோபி உங்களுக்கு பிடிக்காத மாதிரி பேசி நடந்து கொள்கிறீர்கள் என்று ராதிகா, பாக்யாவிடம் கேட்கிறார்.
இப்படி ராதிகா கேட்ட கேள்விக்கு சரியான பதிலடி கொடுக்கும் விதமாக பாக்கியா இந்த ஜென்மத்தில் இல்லை எப்பொழுதுமே அந்த நபர் என்னுடைய வாழ்க்கையில் கிடையவே கிடையாது. அப்படி ஒரு எண்ணம் துளி கூட என்னிடம் இல்லை என்று தெளிவாக ராதிகாக்கு சொல்லிவிட்டார். அடுத்ததாக கோபி, இனியா,ஈஸ்வரி மற்றும் செழியன் அனைவரும் ஹோட்டலில் இருந்து சாப்பாடு வாங்கிட்டு வருகிறார்கள்.
அப்படி வாங்கிட்டு வரும்பொழுது கோபி, பாக்கியாவிற்கு பிடித்த சாப்பாட்டையும் வாங்கிட்டு வந்து கொடுக்கிறார். ஆனால் பாக்கியா அந்த சாப்பாட்டை வாங்காமல் பாக்கியாவிற்கு தேவையான சாப்பாட்டை சமைத்து சாப்பிட ஆரம்பித்து விடுகிறார். அடுத்ததாக கோபி, ஈஸ்வரிடம் மயூக்கு பிறந்தநாள் நான் போய் வாழ்த்து சொல்லிட்டு வந்து விடுகிறேன் என்று சொல்கிறார்.
உடனே செழியன், இப்பதான் அவ்வளவு தூரத்தில் இருந்து வந்திருக்கிறோம். நீங்கள் ரெஸ்ட் எடுங்க போக வேண்டாம் என்று தடுக்கிறார். அதே மாதிரி ஈஸ்வரியும் ஏற்கனவே உனக்கு நல்லா அலச்சல், இப்போதைக்கு மறுபடியும் ஏன் தேவையில்லாத கஷ்டம். நீ ஒன்னும் ராதிகா வீட்டுக்கு எல்லாம் போக வேண்டாம், அங்க போனாலே உனக்கு பிரச்சினை வந்து விடும். பிறகு மறுபடியும் நாங்கள் தான் எல்லோரும் உன்னை வந்து ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகணும்.
நீ இங்கே இரு என்று சொல்கிறார், ஆனாலும் கோபி நான் போயிட்டு இப்ப வந்து விடுகிறேன் என்று சொல்லிய நிலையில் இனியா நான் இப்பதான் டான்ஸ் போட்டியில் வெற்றி பெற்றுவிட்டேன் என்ற சந்தோஷத்தில் இருக்கிறேன். இந்த சந்தோஷத்தை கொண்டாடலாம் என்பதற்காக நாம் அனைவரும் சேர்ந்து சாப்பிடலாம் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் அங்கு போய்விட்டால் உடனே வர மாட்டீங்க என்று இனியா புலம்பிய நிலையில் கோபி சரி நான் போகவில்லை என்று கூறி விடுகிறார்.
இதையெல்லாம் பார்த்த ஜெனி, பாக்யா மற்றும் செல்வி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள. அப்பொழுது செல்வி, இவங்க மூன்று பேரும் பல சதிகளை செய்து ராதிகாவுடன் கோபி சாரை சேரவிடாமல் ஆக்கி விடுவார்களோ என்று சொல்கிறார். அது என்னமோ உண்மைதான் இந்த மூன்று சூனியக்காரர்கள் இருக்கும் வரை ராதிகா மற்றும் பாக்யா நிம்மதியாகவே இருக்க போவதில்லை.