Bigg Boss 8 Tamil: பிக் பாஸ் 8 சீசன் இப்பொழுது தான் ஆரம்பித்தது போல் இருந்தது, அதற்குள் 12 வாரங்களை கடந்து விட்டது. இன்னும் ஒரு சில வாரங்கள் மட்டுமே இருப்பதால் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய திறமையை நிலை நிறுத்திக் காட்ட வேண்டும் என்பதற்காக மும்மரமாக விளையாடி வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டை விட்டு ரஞ்சித் வெளியேறி இருக்கிறார். இவர்களை தொடர்வது இந்த வாரத்துக்கு நாமினேஷன் ஆன போட்டியாளர்கள் யார் என்றால் ஜாக்லின், விஷால், அன்சிதா, மஞ்சரி, ராணவ், பவித்ரா மற்றும் ஜெஃப்ரி. இதில் ஜாக்லின் மட்டும் தொடர்ந்து 12 வாரங்களாக நாமினேஷன் ஆகிக் கொண்டே வருகிறார்.
ஆனால் என்னதான் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் ஒவ்வொரு வாரத்திலும் ஜாக்லினை நாமினேட் செய்திருந்தாலும், வெளியே இருக்கும் மக்கள் நாங்கள் இருக்கும் எங்களுடைய ஆதரவு ஜாக்லினுக்கு தான் என்று தொடர்ந்து வாக்களித்து வருகிறார்கள்.
இந்த மாதிரியான ஒரு விஷயம் இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்ததே இல்லை. அந்த அளவிற்கு உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் ஜாக்குலினை வச்சு செய்கிறார்கள். அடுத்ததாக விஷால் ஒரு பதனி பதனி என்று சொல்வதற்கு ஏற்ப தர்ஷிகா உடன் ஒட்டி உறவாடி கும்மி அடித்ததால் தர்ஷிகா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.
அடுத்து தர்ஷிகா போன நிலையில் அன்சிதா உடன் பாசப்பிணைப்பாக இருந்ததால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் மொத்த போட்டியாளர்களும் விஜய் சேதுபதி முன்னாடி வச்சு செய்து விட்டார்கள். அந்த வகையில் தர்ஷிகாவுக்கு ஒரு பாயசத்தை போட்டது போல் இந்த வாரம் அன்சிதாவிற்கு பாயாசத்தை ரெடி பண்ணி விஷால் கொடுத்து விடுவார்.
அந்த வகையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது அன்சிதா தான். இதுல விஷால் உடன் ஒட்டி உறவாடிக் கொண்டு பக்கத்திலேயே இருந்து வரும் இன்னொரு நண்பர் யார் என்றால் அருண். ஆனால் அவர் தப்பித்து வருவதற்கு முக்கிய காரணம் அவர்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை கரைத்துக் குடித்து வந்த மிகப்பெரிய வாத்தியார்.
அதனால் அந்த அளவிற்கு அருணை கூடிய சீக்கிரத்தில் அசைத்துப் பார்த்திட முடியாது. இன்னும் கொஞ்ச நாளைக்கு அவருடைய விளையாட்டு தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.