வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

ரிலீசுக்கு முன்பே மாஸ் காட்டும் விக்ரம்.. இப்ப வாங்கடா சிங்கிள்ஸ்

நடிகர் விக்ரம் தற்போது வீர தீரா சூரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. இரண்டாம் பாகம் முதலிலும், முதல் பாகம் அதன் பின்பும் ரிலீசாக உள்ளது.

இந்த படத்தின் ட்ரைலர் மக்கள் கவனத்தை ஈர்த்து நிச்சயம் தரமான படமாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த படம் பொங்கல் ரேஸில் வெளியாகிறது.

இந்த நிலையில், நடிகர் விக்ரம் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துக்கொண்டும் இருக்கிறார். சமீபத்தில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் ஒரு படம் கமிட் ஆகியுள்ளார்.

அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படி இருக்க, நடிகர் விக்ரம் தனது சம்பளத்தையும் பயங்கரமாக ஏற்றியுள்ளார். அவர் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படத்திற்கு 50 கோடி சம்பளம் பேசியுள்ளார்.

ரிலீசுக்கு முன்பே 110 கோடி வசூல்

மேலும், இனி கதையில் கவனம் செலுத்தி, மக்களிடம் சென்றடையும் Script-ல் மட்டும் நடிக்கவிருக்கிறார். தங்களான் பத்ம நிச்சயம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்று எதிர்பார்த்த நிலையில், அது நடக்காமல் போனது.

அது விக்ரம்க்கு ஒரு Comeback-ஆக அமையவில்லை. இப்படி இருக்க வீர தீரா சூரன் படமாவது Comeback-ஆக இருக்குமா என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்.

இந்த நிலையில், தற்போது வீர தீர சூரன் படத்தின் Table Profit மட்டுமே 110 கோடி என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. Broadcast ரைட்ஸ் மட்டுமே 60 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது.

மேலும் Theatrical ரைட்ஸ் 21 கோடிக்கும், மற்ற ரைட்ஸ் 29 கோடிகளுக்கு விற்பனையாகியுள்ளது. இது நடிகர் விக்ரம்-க்கு கேரியரில் செய்த சாதனை என்றே கூறலாம்.

மேலும் நடிகர் விக்ரம் இனிமேல் பிசினெஸ் ஆகும் படங்களில் மட்டுமே தன் உழைப்பை போடவும் முடிவு செய்துள்ளார். ஆகையால் இனி விக்ரமுக்கு ஏறுமுகம் மட்டும் தான்.

Trending News