இந்த வருடம் பாதி வரை, ‘என்னடா இது ஒரு படம் கூட சரியாக வரவில்லை’ என்று புலம்பி கொண்டிருந்த ரசிகர்களுக்கு, ஏப்ரல் மாதத்துக்கு பிறகு வரிசையாக Treat வைத்தார்கள், தமிழ் பட இயக்குனர்கள். பல படங்கள் தியேட்டர்களில் கொண்டாடப்பட்டது. அப்படி Best Theatre Experience கொடுத்த 10 படங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Goat: இந்த படம் 2024-ல் அதிகம் எதிர்பார்க்க பட்ட படமாக உள்ளது. கோட் படத்தின் படப்பிடிப்பின் போது தான் தளபதி விஜய் தான் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் பயணத்தை தொடரப்போவதாக கூறினார். அதனாலயே இந்த படம் விஜயின் கடைசி படத்துக்கு முந்திய படம் என்பதால், ஏராளமான மக்கள் தியேட்டருக்கு சென்று படம் பார்த்தார்கள். மேலும் படத்தில் ஏகப்பட்ட கேமியோ கதாபாத்திரங்கள், படத்துக்கு வலு சேர்த்து Best Theatre Experience-ஐ கொடுத்தது.
வேட்டையன்: இந்த வருடம் சூப்பர்ஸ்டார் வித்தியாசமான ஒரு படம், குறிப்பாக ஒரு நல்ல கன்டென்ட் படத்தில் நடிக்க போகிறார் என்று கூறியவுடன், அது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அப்படி, தரமான கன்டென்ட் படமாக உருவாகும் என்று எதிர்பார்த்த நேரத்தில், தேவை இல்லாத வசனங்கள் சேர்த்ததால், கொஞ்சம் கலவையான விமர்சனங்கள் வந்தது. இருப்பினும், படத்தை சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
அமரன்: சிவகார்த்திகேயன் கேரியரில் பெஸ்ட் படமாக இந்த படம் அமைந்தது. முகுந்த் வரதராஜனின் பையோபிக்கில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். அவரது அசாதாரண நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களை கவர்ந்தார். இந்த வருடம் அதிகம் வசூல் செய்த படங்களில் அமரன் படமும் ஒன்றாக உள்ளது. இந்த படம் மக்களை எமோஷனல்-ஆக Connect ஆகவைத்தது.
Maharaja: இந்த வருடத்தின் சிறந்த படத்துக்கான விருதை மகாராஜா படத்துக்கு கொடுக்கலாம் என்ற அளவுக்கு தரமான படம். சீனாவில் இப்போதும் இந்த படம் சக்க போடு போடுகிறது. விஜய் சேதுபதியின் 50-ஆவது படமாக உருவாகி நல்ல தியேட்டர் Experience, அதே நேரத்தில், வித்தியாசமான திரைக்கதை என்று தமிழ் சினிமாவை உலக தரத்துக்கு எடுத்து சென்றது மகாராஜா திரைப்படம்.
Garudan: கதையின் நாயகனாக சூரி நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில், சசி குமார், உன்னி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் வெளியான கருடன் படமும் இந்த ஆண்டின் 100 கோடி கிளப்பில் இணைந்தது. இந்த படம் OTT-யில் வந்த பிறகு, தியேட்டரில் Miss பண்ணிட்டோமே என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு தரமான Action காட்சிகள் இருக்கும். சூரியை இப்படி இதற்க்கு முன் எந்த படத்திலும் பார்த்திருக்க மாட்டோம்.
Lucky Baskar: துல்கர் சல்மானின் முதல் 100 கோடி வசூலுக்கு வித்திட்ட படம் தான் Lucky பாஸ்கர். தீபாவளி ரேஸில் வெளியான இந்த படம் அமரன் படத்துக்கு போட்டியாக நல்ல வசூல் வேட்டை நடத்தியது. இந்த படம், நடுத்தர வர்க்கத்தினருக்கு Connect ஆகி, நல்ல Experience-ஐ கொடுத்தது.
Raayan: தனுஷ் கேரியரில் முதல் 100 கோடி வசூல் செய்த படமென்றால், அது ராயன் படம் தான். படத்தில், தங்கையின் பாசத்தை அழகாக காட்டுவதோடு, மிரட்டலான Action காட்சிகள் தனுஷ் ரசிகர்களுக்கு Treat ஆக அமைந்தது. மேலும் ரஹ்மான் பின்னணி இசையில் மிரட்டி எடுத்திருப்பார். இந்த படமும் Best Theatre Experience-ஐ கொடுத்துள்ளது.
Lubber Pandhu: மற்ற மாநில ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் என்று எல்லாரும் பாராட்டிய ஒரு படமென்றால் அது லப்பர் பந்து படம் தான். வெறும் 3 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம், 50 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியதோடு, நல்ல விமர்சனங்களை பெற்றது. முக்கியமாக ஹரிஷ் கல்யாணுக்கும், அட்டகத்தி தினேஷுக்கு கேரியரில் தி பெஸ்ட் படமாக அமைந்தது. முக்கியமாக சூப்பர்ஸ்டார் படத்துடன் மோதி வெற்றி பெற்றதென்பது குறிப்பிடத்தக்கது.
Black: ஜீவா நடிப்பில் உருவான Black திரைப்படம், தியேட்டரில் பயங்கரமாக இருக்கும். ஆனால் பலர் இந்த படத்தை தியேட்டரில் தவறவிட்டார்கள். Science Fiction கதையாக உருவான இந்த படம், தியேட்டரில் பார்க்கும்போது ஒவ்வொரு நிமிடமும் திக் திக் Moment ஆக தான் இருந்தது. மேலும் ஒரு முறைக்கு இரண்டு முறை பார்த்தால் மட்டுமே கதை புரியும்.
Demonte Colony 2: அருள்நிதி பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் வெளியான இந்த படம், தியேட்டரில் பார்த்து பயப்பட வேண்டிய ஒரு படம். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் தரமாக இருந்தது. இந்த படத்தையும் பலர் தியேட்டரில் தவறவிட்டு, OTT-யில் பார்த்து, “தியேட்டரில் மிஸ் பண்ணிட்டோமே..” என்று பீல் செய்தனர்.