இந்த வருடம் மக்கள் கொண்டாடிய படங்களில் ஒன்று கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் இசையில் தளபதி விஜய் நடித்த இந்த படம் தியேட்டர் வசூலில் சக்க போடு போட்டது. மேலும் இந்த படத்தில், ஏகப்பட்ட கேமியோ-க்கள் படத்துக்கு மேலும் பலம் சேர்த்தது. விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் படியாக கதை அமைந்திருந்தது.
ஆனால் இந்த படத்தை வெங்கட் பிரபு முதலில் விஜய்க்காக யோசிக்கவில்லை. மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒரு முறை சூப்பர்ஸ்டாரை சந்திக்கும்போது, அவரிடம் எதேர்ச்சியாக சொன்ன ஒரு கதை தான் கோட் படத்தின் கதை. முதலில் சூப்பர்ஸ்டாரை நடிக்க வைக்க தான் முயற்சி செய்தார் வெங்கட் பிரபு. அவரிடம் கதையை சொல்லும்போது கொஞ்சம் சொதப்பிவிட்டாராம்.
அதனால் சூப்பர்ஸ்டாருக்கு படம் கனெக்ட் ஆகாமல், வேறு கதை சொல்லுங்கள் என்று கூறிவிட்டார். அப்படி சூப்பர்ஸ்டாரிடம் சொல்லும்போது, இதே கதையை சொன்னார்.
ஆனால் டபுள் ஆக்ஷன் அப்போது வெங்கட் பிரபு யோசிக்கவில்லை. மகனாக முதலில் தனுஷை நடிக்க வைக்கலாம், தரமாக இருக்கும் என்று நினைத்து கூறியிருக்கிறார்.
ஆனால் சூப்பர்ஸ்டாருக்கு இந்த ஐடியா சுத்தமாக பிடிக்கவில்லை. அவர் வேண்டாம் என்று கூற, விஜயிடம் கதை கூறி இருக்கிறார். விஜய் இந்த படத்தின் கதையை கேட்டுவிட்டு, எந்த ரெஸ்பான்ஸும் கொடுக்கவில்லை.
கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு பிறகு தான் ‘வெங்கட் பிரபு எதோ கதை சொன்னாரே அவரை கூப்பிடு ‘ என்று அவரது மேனேஜரிடம் கூறியுள்ளார்.
அவர் மீண்டும் வெங்கட் பிரபுவை அழைக்க, அவர் வந்து கதை சொல்ல விஜய் ஓகே சொல்லிவிட்டார். அதன் பின் தான் படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில், தரமான ஆர்ட்டிஸ்ட்-களை கேமியோ செய்ய அழைத்துள்ளார்.