விடுதலை 2 படம் வெளியாகி தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் கம்யூனிச சித்தாந்தம் பேசும் ஒரு படமாக உருவானதால், மக்கள் தற்போது இதை கொண்டாடி வருகிறார்கள். மொத்தமாக, இரண்டு பாகங்களை எடுக்க 4 வருட காலம் எடுத்துக்கொண்டுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். 90 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்த படம், இதுவரை 22 கோடி வரை வசூல் செய்துள்ளது.
படத்துக்கு A சான்றிதழ் வேறு கொடுத்திருப்பதனால், படத்துக்கு Family audience வருகை இல்லை. இதனால் படம்போட்ட பணத்தை எடுத்துவிடுமா என்ற சந்தேகம் ஒரு புறம் உள்ளது. இப்படி இருக்க, படத்தில் முக்கியமான ஒரு விஷயத்தை செய்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். அதை நீங்கள் நோட் செய்தீர்களா?
படத்தில் நடித்த 10 இயக்குனர்கள்
விடுதலை 2 படத்தில் மட்டும் 10 இயக்குனர்கள், வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். அப்படி, ராஜிவ் மேனன், கெளதம் மேனன், சரவணா சுப்பையா, பாலாஜி சக்திவேல், அனுராக் காஷ்யப், போஸ் வெங்கட், வேலராஜ், மனோபாலா, தமிழ், பாவல் நவகீதன் ஆகியோர் நடித்துள்ளார்கள். 90 காலகட்டத்தில், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்சார கனவு என்று பல படங்களை கொடுத்தவர் ராஜீவ் மேனன்.
கெளதம் மேனன்-க்கு தனியாக ஒரு Intro கொடுக்க தேவை இல்லை. ஆண்களுக்கு காதலிக்க கற்று கொடுத்தவர் GVM. Citizen போன்ற blockbuster படத்தை கொடுத்தவர் இயக்குனர் சரவண சுப்பையா. வழக்கு எண் 18/9, சாமுராய் போன்ற நல்ல படைப்புகளை கொடுத்தவர் பாலாஜி சக்திவேல். வில்லன் கதாபாத்திரங்களில் மிரட்டி வரும் அனுராக் காஷ்யப், பல ஹிந்தி வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
அடுத்ததாக, ஜிவி பிரகாஷை வைத்தும் ஒரு படமெடுக்க திட்டமிட்டுள்ளார். போஸ் வெங்கட், ஒரு சமீபத்தில் விமலை வைத்து சார் படத்தை எடுத்து வெற்றி கொடுத்திருந்தார். வேல் ராஜ், தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி, தங்கமகன் உள்ளிட்ட படங்களை எடுத்து வெற்றி பெற்றவர். தமிழில் இயக்குனராக இருந்தாலும், காமெடியனாக சிரிக்க வைத்தவர் மனோபாலா. அவரது இறப்புக்கு பின், அவர் நடித்த கதாபாத்திரங்கள் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
டாணாக்காரன், பசங்க உள்ளிட்ட பல படங்களை எடுத்து வெற்றிபெற்றவர் இயக்குனர் தமிழ். v1 படம் எடுத்தவர் இயக்குனர் பாவல் நவகீதன். இப்படி பல திறமையான இயக்குனர்கள் சங்கமித்த ஒரு படமாக விடுதலை 2 படம் தற்போது அமைந்துள்ளது. இவர்கள் அனைவருக்குமே, சிறந்த கதாபாத்திரங்களும் அமைந்துள்ளது.