2024-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஒரு சிறப்பான ஆண்டாக இருந்தது என்றே சொல்லலாம். இந்த வருடம் பல படங்கள் 100 கோடி கிளப்பில் இணைந்தது. மேலும் சின்ன பட்ஜெட் படங்கள் பலவற்றுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது. முக்கியமாக தமிழ் சினிமாவின் பாதி வரைக்கும், ஒரு படம் கூட சரியாக வரவில்லையே என்று புலம்பிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு, பல படங்கள் Treat ஆக கிடைத்தது.
வருஷம் முடிய இன்னும் 1 வாரம் தான் இருக்கிறது. இந்த ஒரு வாரத்துக்குள் முக்கியமான ஒரு சில அப்டேட்-கள் வரும் என்று கூறப்படுகிறது. அதுவும் தளபதி 69 படத்தின் அப்டேட்-டை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். காரணம், அதுதான் தளபதியின் கடைசி படம். மேலும் பொங்கலுக்கு வெளியாகும் விடாமுயற்சி படத்தின் முக்கிய 2 அப்டேட்டும் வந்துள்ளது..
வெளியாகும் 4 Fire அப்டேட்
2024-ஆம் ஆண்டு முடிவதற்குள், நிச்சயமாக, விடாமுயற்சி படத்தின் First single மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகிவிடுமாம். ஆனால் இதை கேட்ட ரசிகர்கள், Promise பண்ணு… அப்போ தான் நம்புவேன் என்ற லெவெலுக்கு இறங்கி விட்டார்கள். காரணம் கடந்த மூன்று வாரமாக இந்த வார அப்டேட்-ஆக இவை வெளியாகும் என்று கூறி வருகிறார்கள்.
அடுத்ததாக, சூர்யா 44 படத்தின் டைட்டில் மற்றும் டீஸர் வெளியாகவிருக்கிறது. இந்த இரண்டும் நாளை வெளியாகும் என்று கூறப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜ் கதை என்பதால், நிச்சயம் தரமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
மேலும் இந்த வருடம் முடிவதற்குள், இட்லி கடை படத்தின் First Look வெளியாகிவிடுமாம். தனுஷின் இட்லி கடை, பீல் குட் படமாக உருவாகி வருகிறது. குறிப்பாக நித்யா மேனன் இந்த படத்தில் நடிப்பதனாலையே படத்தின் மீது பெருமளவு எதிர்பார்ப்பு உள்ளது.
கடைசியாக நியூ இயர் அன்று, தளபதி 69 படத்தில் First Look மற்றும் டைட்டில் வெளியாகவிருக்கிறது. இது விஜயின் கடைசி படம் என்பதால், இந்த படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் ரசிகர்கள். இருப்பினும், இது ஒரு ரீமேக் படம் என்பதில், அவர்களுக்கு சின்ன வருத்தமும் உள்ளது.