Ajith- முதன்முதலில் மார்க் ஆண்டனி படத்தின் கதையை அஜித்துக்கு கூறியுள்ளார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். அப்பொழுது அஜித்தும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துக்கொண்டு இருந்தனர்.
அப்போது ஏற்பட்ட நட்பு ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்திடம் மார்க் ஆண்டோனி படத்தின் ஒரு வரி கதையை கூறியுள்ளார். அதைக் கேட்ட அஜித்
ஆதிக் ரவிச்சந்திரன் முன்பு செய்த படங்களை விசாரித்துள்ளார்.
சுமாரான இயக்குனர் என்று கேள்விப்பட்டதுமே நீங்க சொன்ன கதையை வேறு ஒருவரை வைத்து படமாக்கிட்டு வாருங்கள். அதன் பிறகு பார்க்கலாம் எனக் கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் இல்லை என ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்திடம் சொல்லி இருக்கிறார். அஜித் தன்னுடைய நண்பருக்கு தகவல் சொல்லி அவரிடம் சென்று கதை சொல்ல சொல்லிருக்கிறார்.
பிறகு கதையை ஓகே செய்து விஷாலை நாயகனாக தேர்வு செய்துள்ளார் ஆதி ரவிச்சந்திரன். மார்க் ஆண்டவனின் படத்திற்கு முழுக்க காரணமே அஜித் தான்.
அந்த படம் மாபெரும் வெற்றி அடையவே அவர்மேல் நம்பிக்கை வைத்து ‘குட் பாக் அட்லி’ படத்தில் தற்பொழுது நடித்து கொண்டுள்ளார் அஜித்.