Rajini – ஒரு படம் இரண்டு படம் வெற்றி அடைந்து விட்டாலே ஈக்கள் மொய்ப்பது போல் பல நடிகர்கள் அந்த இயக்குனரை மேய்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதிலும் மாநகரம், கைதி, விக்ரம் என பிரம்மாண்ட ஹிட் கொடுத்தா சும்மாவா விடுவார்கள்.
மாஸ்டர் என்னும் சுமாரான படத்தைக் கொடுத்து, லியோ எனும் சுமார் படத்தை கொடுத்தார் லோகேஷ் கனகராஜ். தற்பொழுது சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கிக் கொண்டிருக்கும் கூலி திரைப்படம் சூப்பர் ஸ்டாருக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் தடுமாற்றத்தை ரஜினி பார்த்துள்ளார். இதற்குமுன் நடித்து ஹிட் ஆன ஜெயிலர் திரைப்படம் ஆரம்பிக்கும் முன் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
நெல்சன் விஜய் வைத்து எடுத்த பீஸ்ட் மூவி படு தோல்வியை சந்தித்தது. நெல்சன் பயந்தார் அதை உணர்ந்த ரஜினி தன்னுடைய சினிமா நண்பர்கள் சில பேரிடம் ஆலோசனை செய்துள்ளார்.
இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் மற்றும் சில இயக்குனர்கள் எழுத்தாளர்கள் எல்லாம் சேர்ந்து ஜெய்லர் திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுத உதவியாக இருந்தனர்.
தற்போது கூலி படத்திற்கு மீண்டும் கேஎஸ் ரவிக்குமார், எழுத்தாளர்கள் இந்த கூட்டணி தேவை என ரஜினி கருதுகிறார்.
இது ரஜினி, லோகேஷ் கனகராஜுக்கு சொன்னதும் அவர் வருத்தப்பட்டுள்ளார். தயாரிப்பு நிர்வாகத்திற்கு இந்தத் தகவல் சென்றதும் ரஜினி சொல்வதை கேளுங்கள் என லோகேஷ் கனகராஜுக்கு தகவல் வந்துள்ளது.
இதனால் படம் எடுப்பதில் பிரச்சனை வந்து விடுமோ என்று குழப்பத்தில் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.