வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

முத்துவை காலி செய்ய நடக்கும் சதி.. பிக்பாஸ் டைட்டிலை வைத்து மாஸ்டர் பிளான் போடும் விஜய் டிவி

Biggboss8-Muthukumaran: பிக்பாஸ் நிகழ்ச்சி இதோ அதோ என இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இந்த சீசன் டைட்டிலை யார் பெற வேண்டும் என்பதையும் மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.

ஆனால் விஜய் டிவி வேறு ஒரு பிளான் போட்டு சில வேலைகளை பார்ப்பது போல் தெரிகிறது. அதாவது ஆரம்பத்தில் இருந்து முத்துக்குமரனுக்கு சோசியல் மீடியாவில் ஆதரவு இருக்கிறது.

அதேபோல் மக்கள் மத்தியிலும் அவர் செல்வாக்கு பெற்றுவிட்டார். ஆனால் கடந்த சில நாட்களாக அவர் மீதான நெகட்டிவ் செய்திகள் அதிகமாக பரவ ஆரம்பித்துவிட்டது.

அதேபோல் விஜய் டிவி வெளியிடும் ப்ரோமோவில் கூட முத்துவின் மீது தவறு இருப்பது போல் காட்டப்படுகிறது. இதற்கு ஆடியன்ஸ் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

அதேபோல் சௌந்தர்யா, ராணவ் இருவரின் பி ஆர் கும்பல் முத்துவுக்கு எதிரான வேலையில் இறங்கிவிட்டனர். மிடில் கிளாஸ் பையனிடம் காஸ்ட்லியான பைக் இருக்கிறது.

முத்துவை காலி செய்ய நடக்கும் சதி

வெளிநாடு சுற்றுலா செல்கிறார். அப்படி இருக்கும்போது எப்படி இவர் மிடில் கிளாஸ் ஆக இருக்க முடியும். முத்து சொல்வது அத்தனையும் பொய் என செய்தி பரப்பி வருகின்றனர்.

இதற்கு ஆதரவும் எழுந்துள்ளது. ஆனால் முத்துவின் ரசிகர்கள் மிடில் கிளாஸ் பையன் நல்லா வாழக்கூடாதா என எதிர் கேள்வி கேட்டு வருகின்றனர்.

அதேபோல் தொடர்ந்து நெகட்டிவ் செய்திகள் பரவுவதால் முத்துவின் ஆதரவாளர்கள் கூட எதிராக மாறும் நிலையும் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் சில பிரபலங்கள் முத்துவுக்காக சப்போர்ட் செய்து வருகின்றனர்.

மேலும் விஜய் டிவி முத்து டைட்டில் வின்னர் ஆவதை விரும்பவில்லை. அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களை வெற்றியாளராக அறிவிக்க முடிவு செய்துவிட்டார்கள் என ஆடியன்ஸ் கொந்தளித்து வருகின்றனர்.

இப்படி சோசியல் மீடியா முழுவதும் பிக்பாஸ் பற்றிய பேச்சு தான் பரபரப்பை கிளப்பி வருகிறது. அதனால் இந்த சீசன் டைட்டில் யாருக்கு என்ற சுவாரஸ்யம் ஏற்பட்டுள்ளது. காத்திருப்போம் இறுதி நாளுக்காக.

Trending News