புதன்கிழமை, ஜனவரி 8, 2025

கோடிக்கணக்கில் கொடுத்து தலைவலியில் உதயநிதி.. நண்பேன்டானு சொல்லி சூனியம் வைத்த 2 படங்கள்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரிய பட்ஜெட் படங்களை எல்லாம் வாங்கி விநியோகம் செய்து வருகிறது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ். இவர்கள் வந்த பின் ஓரளவு எல்லா படங்களுக்கும் நியாயமான வசூல் கிடைக்கிறது என தயாரிப்பாளர்கள் தரப்பு கூறி வருகிறது.

பல படங்களுக்கு கடன் கொடுத்து உதவி வருகிறது ரெட் ஜெயன்ட் நிறுவனம். அப்படித்தான் லைகா தயாரிக்கும் இரண்டு படங்களுக்கு ஒரு பெரும் தொகையை கடனாக கொடுத்து இப்பொழுது மாட்டிக் கொண்டு முழிக்கிறது. அந்த படங்கள் ரிலீஸ் ஆகாமல் உதயநிதி தரப்பிற்கு தலைவலி கொடுத்து வருகிறது.

லைகா நிறுவனம் பெரும் பொருட் செலவில் எடுத்து வரும் படம் விடாமுயற்சி. அஜித் நடித்த இந்த படம் முழுவதுமாக முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் இந்த படம் ரிலீஸ் ஆகாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இதற்கு லைகாவின் நிதி நெருக்கடியை ஒரு காரணமாக கூறுகிறார்கள்.

வைகா தயாரிப்பில் இன்னொரு படமும் கிடப்பில் கிடைக்கிறது. சங்கர், கமல் கூட்டணி உருவான இந்தியன் 3 படமும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இதற்காகவும் உதயநிதி ஒரு பெருந்தொகையை லைக்காவிற்கு கடனாக கொடுத்துள்ளார். இந்த ரெண்டு படங்களும் இப்பொழுது நிலுவையில் இருக்கிறது.

சுபாஷ்கரன் மற்றும் உதயநிதி இருவருக்கும் நெருங்கிய நட்பு உண்டு. இவர்கள் கூட்டணியில் பல படங்கள் உருவாகியுள்ளது.இப்பொழுது இந்த பண பிரச்சனை எங்கே போய் முடியும் என்பது தெரியவில்லை.

Trending News