புதன்கிழமை, ஜனவரி 8, 2025

சந்தியா ராகம் சீரியலில் கார்த்திக்கை கொலை செய்த லிங்கம்.. கதிர் மீது விழுந்த பழி, உண்மையை நிரூபிக்க போகும் மாயா

Sandhiya Ragam Serial: ஜி தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சந்தியா ராகம் சீரியலில், மாயாவை காப்பாற்ற வேண்டும் என்ற பதட்டத்தில் ஜானகி கையில் கிடைத்த கம்பியை எடுத்து கார்த்திக் தலையில் போட்டு விட்டார். இதனால் கார்த்திக் மயக்கம் போட்டு ரத்தம் அதிகமாக கொட்டி விட்டது. உடனே ஜானகி மயக்கத்தில் இருந்த மாயாவை எழுப்பி விட்டார். மாயா கண்விழித்துப் பார்த்ததும் கார்த்திக் ரத்தத்துடன் இருப்பதை பார்த்து உயிர் இருக்கிறதா இல்லையா என்று செக் பண்ணுகிறார்.

உயிரில்லை என்று தவறாக நினைத்து கொலை செய்து விட்டோமோ என்று ரெண்டு பேரும் பயப்பட ஆரம்பித்து விட்டார்கள். அப்பொழுது ஜானகி, போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்விடலாம் என்று சொல்லும் பொழுது மாயா, பத்ரகாளியாக மாறி நீ செய்தது கொலை இல்லை. தப்பு செய்தவர்களை வதம் தான் பண்ணி இருக்கிறாய் என்று சொல்கிறது. அதனால் மாயா என்ன சொல்கிறாரோ அதன்படி நீயும் நடந்து கொள் என்று சொல்லிய நிலையில் ஜானகியும் சரி என்று சொல்லிவிடுகிறார்.

அடுத்ததாக ஜானகி மற்றும் மாயா, கார்த்திக் இறந்து விட்டதாக நினைத்து வெளியில் குழி தோண்டி புதைத்து விடலாம் என இரண்டு பேரும் சேர்ந்து அங்கே மண் தோண்ட போய் விட்டார்கள். இந்த கேப்பில் எல்லாத்தையும் பார்த்துக் கொண்டிருந்த லிங்கம் யாருக்கும் தெரியாமல் வந்த நிலையில் கார்த்திக்கு கொஞ்சம் நினைவு திரும்பியதை பார்க்கிறார்.

ஆனால் கார்த்திக் உயிருடன் இருந்தால் ரகுராம் குடும்பத்தை பழிவாங்க முடியாது என்பதற்காக லிங்கம், யாருக்கும் தெரியாமல் கார்த்திகை கொலை செய்து விடுகிறார். கொலை செய்துவிட்டு மாயா மற்றும் ஜானகி குழி தோண்டி இருப்பதை போட்டோ எடுக்கிறார். இது எதுவும் தெரியாத ஜானகி மற்றும் மாயா குழி தோண்டிய பிறகு அதில் கார்த்திகை போட்டு மூடி விடுகிறார்கள்.

பிறகு இரண்டு பேரும் வீட்டிற்கு போன நிலையில் யாரிடமும் எதுவும் சொல்லாமல் கமுக்கம் ஆகி விடுகிறார்கள். இன்னொரு பக்கம் புவனேஸ்வரி, கார்த்திகை காணவில்லை என்று பதட்டம் அடைகிறார். அந்த வகையில் போலீஸ் ஸ்டேஷனில் கார்த்திக் காணவில்லை என்று புகார் கொடுத்து ரகுராம் வீட்டில் இருக்கும் கதிர் மேல் தான் எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது.

ஏனென்றால் அவன் தான் கார்த்திக்கை அடித்து விட்டு நான் உன்னை உயிருடைய விட மாட்டேன் என்று எல்லாரும் முன்னாடியும் சொன்னதாக புவனேஸ்வரி போலீஸ் ஸ்டேஷனில் வந்து சொல்லி விடுகிறார். உடனே போலீஸ், ரகுராம் வீட்டிற்கு சென்று கார்த்திக் காணவில்லை என்ற புகாரின்படி விசாரிக்க வேண்டும் என சொல்லி கதிரை அரெஸ்ட் பண்ணிட்டு போகிறார்கள். இதெல்லாம் பார்த்த ஜானகி மற்றும் மாயா உண்மையை சொல்லவும் முடியாமல் கதிரை காப்பாற்ற முடியாமல் தவிக்கிறார்கள்.

ஆனால் மாயா நிச்சயம் கதிரின் இந்த நிலைமையை சரி செய்ய வேண்டும் என்று போராடுவர். அப்பொழுது நிச்சயம் கார்த்திக் கொலைக்கும் ஜானகி பெரியம்மாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இதற்கெல்லாம் காரணம் லிங்கம் தான் என்ற உண்மையை கண்டுபிடித்து கதிரை காப்பாற்றி விடுவார்.

Trending News