சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பாண்டியன் வீட்டை விட்டு கிளம்பிய மச்சான், பீல் பண்ணும் வாரிசு.. முத்துவேல் முகத்தில் கரியை பூச போகும் பழனிவேலு

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியன், பழனிச்சாமிக்கு கல்யாணம் நடக்க வேண்டும் அதே நேரத்தில் அவங்க அம்மா கேட்டுக்கொண்டபடி அவங்க கூட இருந்தால்தான் நடக்கும் என்பது புரிந்து விட்டது. அதனால் வீட்டிற்கு வந்து கோபமாக பழனிவேலுவை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார். என்ன காரணம் என்று புரியாமல் குடும்பத்தில் இருப்பவர்கள் அமைதியாக வேடிக்கை பார்க்கிறார்கள்.

ஆனாலும் பழனிவேலுமிடம் நீ இங்கு இருக்கும் வரை உனக்கு கல்யாணம் எதுவும் நடக்காது. அதனால் உங்க அண்ணன் வீட்டுக்கு போ என்று அனுப்பி வைக்கிறார். மச்சானே இப்படி சொல்லிட்டார் என்ற விரக்தியில் பழனிவேல் எதுவும் மறுப்பு சொல்லாமல் வீட்டை விட்டு கிளம்ப தயாராகி விட்டார்.

ஆனால் பழனிவேலு கிளம்பியதும் மொத்த குடும்பமும் அழ ஆரம்பித்து விட்டது. அத்துடன் அரசியும் ரொம்பவே ஃபீல் பண்ணி அழ ஆரம்பித்து விட்டார். இதற்கிடையில் பழனிவேலுவின் கல்யாணம் நின்ற பொழுது ஆறுதல் சொல்லும் விதமாக அரசி உங்களுக்கு அந்த பொண்ணு செட் ஆகவே இல்லை. அதனால் ஒருவிதத்தில் இந்த கல்யாணம் நின்னதில் எனக்கு சந்தோசம் தான் என்று சொல்லியிருந்தார்.

அந்த வகையில் அரசி மனசிலும் பழனிவேலுவை கல்யாணம் பண்ணலாம் என்ற ஒரு ஆசை இருப்பது போல் தான் தோன்றுகிறது. அதற்கேற்ற மாதிரி தற்போது தன்னுடன் தன் வீட்டில் மாமா இல்லை என்று நினைத்து பார்க்கும் பொழுது அரசி இனிமேல் தான் மாமாவை நினைத்து ரொம்ப பீல் பண்ண போகிறார். ஆனால் இதில் ஒரு டுவிஸ்ட் என்னவென்றால் பாண்டியன் வீட்டை விட்டு வெளியே போக சொன்ன பிறகு பழனிவேலுவும் கிளம்பிவிட்டார்.

ஆனால் பழனிவேலு, எதிர்த்த வீட்டில் இருக்கும் அண்ணன்கள் வீட்டிற்கு போகாமல் எங்கே போக என்று தெரியாமல் வாசலில் நிற்கப் போகிறார். அப்பொழுதுதான் பழனிவேலு, பாண்டியனிடம் சொல்லப் போகிறார் வீட்டை விட்டு போக சொல்ல உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது.

அதே நேரத்தில் எந்த வீட்டுக்கு யார் கூட போய் இருக்கணும் முடிவெடுக்கும் உரிமை எனக்கு மட்டும் தான் இருக்கு என்று சொல்லப் போகிறார். இது தெரியாமல் முத்துவேலு, தம்பி நம்முடன் வந்து விடுவான் என்று நம்பிக்கையில் கரியை பூசும் விதமாக பழனிவேலு அண்ணன் வீட்டுக்கு போகாமல் பாண்டியன் வீட்டில் இருக்கப் போகிறார்.

Trending News