அஜித் குமார் துபாயில் நடைபெற்ற கார் ரேஸ் பந்தயத்தில் மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தினார். கமல், உதயநிதி , சிவகார்த்திகேயன் என அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்தத் போட்டியில் தமிழ்நாடு லோகோவை அஜித் பயன்படுத்தி பட்டையை கிளப்பிவிட்டார்.
“24H Dubai Endurance race” என்ற கார்பந்தய போட்டி துபாயில் நடைபெற்றது. இதில்தான் அஜித்குமார் டீம் மூன்றாவது இடத்தை பிடித்து, தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித் தந்துள்ளது. ஸ்போர்ட்ஸ் மினிஸ்டர் உதயநிதி அஜித்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.
இந்த பந்தயத்தில் சுமார் 568 முறை மைதானத்தை சுற்றிவர வேண்டும். இந்த போட்டிக்கு 24 மணி நேரம் அவகாசம் கொடுப்பார்கள். அஜித் அணியில் இருந்து நான்கு பேர் இதில் பங்கு பெற்றனர். இந்த டீமுக்கு ஸ்பான்சரும் அஜித் தான்.
இந்த போட்டியில் 26 முறை அஜித்தின் டீம் காரை நிறுத்தியுள்ளது. ஒவ்வொரு முறையும் டீசல் முதல் ரிப்பேர் என அனைத்தையும் சரி செய்துள்ளனர். இந்தக் குழுவில் இடம் பெற்ற நான்கு போட்டியாளர்களும் நல்ல திறமை உடையவர்கள்.
குறைந்தபட்சமாக 240 கிலோ மீட்டர் வேகத்தில் காரை இயக்கியுள்ளார்கள். 300 தான் அதிகபட்ச வேகம். ஆனால் அவர்கள் அபாய கட்டத்தையும் தாண்டி அதிக வேகத்தில் காரை இயக்கி மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்கள்.
அனைத்து பிரபலங்களும் பாராட்டிய போதிலும் அஜித்திற்கு விஜய்யிடம் இருந்து எந்த ஒரு பாராட்டும் வரவில்லை. ஒருவேளை அரசியல் ரேசில் குதித்த விஜய்யை அஜித் பாராட்டவில்லை என்பதால் தளபதி வாழ்த்து கூறவில்லையா என்பது தெரியவில்லை. பனையூரே கெதி என கிடக்கிறார் விஜய் பண்ணையார்.