Gossip: ஆரம்பத்தில் ஹீரோயின் ஆக அறிமுகமாகி ஒரு ரவுண்டு வந்தார் இந்த நடிகை. போகப்போக அவர் தன் திறமையை வெளிக்காட்டும் கேரக்டர்களை ஏற்று நடிக்க ஆரம்பித்தார்.
இரண்டாவது ஹீரோயின் நெகட்டிவ் கேரக்டர் என எதுவாக இருந்தாலும் அம்மணி பின்னி பெடல் எடுத்து விடுவார். அதுவே அவருக்கு அடுத்தடுத்த படங்களை கொடுத்தது.
ஆனாலும் அவருக்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் வழக்கம் போல திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார் நடிகை.
திருமண வாழ்க்கை நல்லபடியாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது நடிகை செம அப்சட்டில் இருக்கிறாராம். இதற்கு காரணம் சமீபத்தில் வெளிவந்த படம் தான்.
படம் ஹிட் ஆகியும் சோகத்தில் இருக்கும் நடிகை
அந்த படத்தில் நடிகை ரொம்பவே தாராளம் காட்டி நடித்திருந்தார். கொஞ்சம் தாமதமாக வந்திருந்த படம் இப்போது சக்கை போடு போட்டு வருகிறது.
அந்த படம் நடிகை நடிக்க வந்த புதிதில் கமிட் ஆனது. அதிலும் நடிகையின் முன்னாள் காதலர் தான் அந்தப் படத்தின் ஹீரோ. இது போதாதா பிரச்சனைக்கு.
படத்தை பார்த்த நடிகையின் கணவர் இப்போது சரமாரியாக கேள்வி கேட்கிறாராம். எதற்காக இவ்வளவு கிளாமரா நடிச்சி இருக்க என மனைவியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டாராம்.
அதிலும் அந்த ஹீரோ கூட இவ்வளவு நெருக்கமா நடிச்சிருக்க. அப்ப பத்திரிக்கையில் வந்த செய்தி எல்லாம் உண்மைதானா இன்னும் என்னென்ன எல்லாம் மறைச்சு வச்சிருக்க என கோபமாக பேசி இருக்கிறார்.
நடிகையும் தன் தரப்பு நியாயத்தை சொல்லி இருக்கிறார். ஆனாலும் கணவரை சமாதானம் செய்ய முடியாததால் படம் வெற்றி பெற்ற சந்தோஷத்தை கூட கொண்டாட முடியாமல் நொந்து போய் இருக்கிறாராம்.