கூலி படத்திற்குப் பின் லோகேஷ் கனகராஜின் லைன் அப் தான் இப்பொழுது ஹாட் டாப்பிக்காக போய்க்கொண்டிருக்கிறது. அவர் கைதி 2 படம் எடுப்பார் என்று எதிர்பார்க்கையில் அவர் பாலிவுட் பக்கம் போவதாக ஒரு தகவல் அடி போடுகிறது.
இரண்டு வருடங்களுக்கு முன் சூர்யாவை வைத்து ஒரு படம் பண்ணுவதாக இருந்தார் லோகேஷ் கனகராஜ். ஆனால் அந்த படம் இதுவரை கைகூடி வரவில்லை. இப்பொழுது அந்த கதைக்கு வேறு ஒரு நடிகரை தேர்ந்தெடுத்துள்ளார் லோகேஷ்.
புறநானூறு, ரெட்ரோ என அடுத்தடுத்து சூர்யா பிஸியாக இருப்பதால் அவர் கால் சீட் இன்னும் ஒரு வருடத்திற்கு கிடையாது. ஏற்கனவே சூர்யாவை வைத்து லோகேஷ் கனகராஜ் ரோலக்ஸ் என்ற படத்தை இயக்க உள்ளார். அதனால் அவரிடம் சொன்ன பழைய கதைக்கு பாலிவுட்டில் அமீர்கானை தேர்ந்தெடுத்து விட்டார்.
“இரும்பு கை மாயாவி” இந்த படக்கதை ஆரம்பத்தில் சூர்யாவை வைத்து உருவாக்கப்பட்டது ,ஆனால் இப்பொழுது இதில் அமீர்கான் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் மற்றும் அமீர் கான் அடிக்கடி மும்பையில் சந்தித்து பேசி வருகிறார்கள்.
ஏற்கனவே சூர்யாவுடன் அமீர்கானுக்கு நெருங்கிய நட்பு இருந்து வருகிறது. இவர் நடித்த கஜினி படத்தை ரீமேக் செய்து நடித்தவர் அமீர்கான். சூர்யா, மும்பை சென்றபோது இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தார்கள். இதனால் இருவருக்கும் இடையே சினிமாவையும் தாண்டி நல்ல நட்பு இருந்து வருகிறது.