SJ Suryah: தனுஷ் இப்போது நடிப்பு இயக்கம் என பிசியாக இருக்கிறார். ராயன் பட வெற்றியை தொடர்ந்து குபேரா, இட்லி கடை என அடுத்தடுத்து அவர் நடிப்பில் படங்கள் வெளிவர இருக்கிறது.
இதில் இளம் நட்சத்திரங்களை வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை அவர் இயக்கியுள்ளார். அப்படம் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகிறது.
ஏற்கனவே படத்தின் பாடல்கள் ஹிட் ஆகி இருந்த நிலையில் தற்போது எஸ் ஜே சூர்யா தன்னுடைய முதல் விமர்சனத்தை கொடுத்துள்ளார். அதில் அவர் தனுஷை ஆகா ஓகோ என புகழ்ந்துள்ளார்.
முதல் விமர்சனம் கொடுத்த எஸ் ஜே சூர்யா
ராயன் படத்தில் தனுசுக்கு வில்லனாக இவர் நடித்திருந்த நிலையில் தற்போது அவருடன் இணைந்து இப்படத்தை பார்த்துள்ளார்.
அது குறித்து தன் சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு பதிவை அவர் போட்டுள்ளார். இப்படம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு படமாகும். உணர்ச்சிகரமான தனித்துவமான படமாக இருக்கிறது.
ராயன் படத்திற்கு பிறகு இவ்வளவு பிசியான நேரத்திலும் கூட உங்களால் எப்படி இப்படி ஒரு படத்தை கொடுக்க முடிந்தது தனுஷ் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் படத்தில் நடித்திருக்கும் இளம் பிரபலங்கள் அனைவரையும் பாராட்டி தன் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பதிவு மற்றும் விமர்சனம் படத்திற்கான பிரமோஷன் ஆக மாறியுள்ளது.