புதன்கிழமை, ஜனவரி 22, 2025

பிரபாகரனுடன் எடிட் செய்யப்பட்ட போட்டோ.. சர்ச்சை கேள்விக்கு சீமானின் மழுப்பல் பதில்

Seeman: கடந்த சில நாட்களாகவே சீமான் பற்றிய சர்ச்சை செய்திகள் மீடியாவை சுற்றி வருகிறது. பெரியார் பற்றி அவர் சொன்ன கருத்து பூகம்பமாக வெடித்தது.

அதைத்தொடர்ந்து பலர் அவருக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தனர். அந்த ரணகளம் முடிவதற்குள் மற்றொரு சர்ச்சை வெடித்துள்ளது.

அதாவது சீமான் விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை சந்தித்ததாக பலமுறை சொல்லி இருக்கிறார். அப்போது நடந்த நிகழ்வுகள் குறித்தும் நினைவு கூர்ந்துள்ளார்.

பிரபாகரனுடன் எடிட் செய்யப்பட்ட போட்டோ

ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என பலர் தெரிவித்து வந்தனர். இந்த சூழலில் இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் அந்த போட்டோவை எடிட் செய்து கொடுத்தது நான்தான்.

பிரபாகரனை சீமான் சந்திக்கவே இல்லை என்று பதிவிட்டு இருந்தார். அதை தொடர்ந்து இந்த விவகாரம் மீடியாவில் பேசு பொருளாக மாறியது.

இந்நிலையில் சீமான் விழுப்புரத்தில் நடைபெற்ற கள் விடுதலை மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது பனங்கள் குடித்து தன்னுடைய ஆதரவை அவர் தெரிவித்தார்.

அதை அடுத்து செய்தியாளர்கள் போட்டோ எடிட் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர். ஆனால் சீமான் அதற்கு முறையான பதில் கொடுக்காமல் அதை விடுங்க என மழுப்பிவிட்டார்.

அந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வரும் நிலையில் அப்ப போட்டோ எடிட் உண்மைதானா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Trending News