புதன்கிழமை, ஜனவரி 22, 2025

நம்பி நம்பி ஒவ்வொரு முறையும் ஏமாற்றம் அடையும் விக்ரம்.. கோழையாய் மாறிய வீர தீர சூரன்

கெத்தான விக்ரமை பார்த்து பல வருடம் ஆகிவிட்டது. கடைசியாக நடித்த தங்களான் படத்தில் கூட அவருக்கு கோமணம் கட்டி சுத்த விட்டிருந்தனர். 2011 மணிரத்தினத்தின் ராவணன் படத்திற்கு பின் விக்ரமுக்கு பெஸ்ட் என எந்த படமும் அமையவில்லை.

கோப்ரா, மஹான்,பொன்னியின் செல்வன், தங்களான் என அடுத்தடுத்து பல படங்கள் வந்தாலும் எதுவும் சொல்லிக் கொள்ளும்படி ஹிட்டாக அமையவில்லை. இவரது ரசிகர்கள் இப்பொழுது இவர் நடிப்பில் வெளிவர இருக்கும் வீர தீர சூரன் படத்தை மிகவும் எதிர்பார்த்து வருகிறார்கள்.

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் எஸ் யூ அருண்குமார். தனித்துவமான கதைகளை தேர்வு செய்யும் டைரக்டரான இவர் தற்போது விக்ரம்மை வைத்து இயக்கி வரும் படம் வீர தீரசூரன். இந்த படத்தில் அவரை செம கெத்தாக காட்டியிருக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் இரண்டும் வெளிவந்து விக்ரம் ரசிகர்களை சிலாகிக்க செய்தது. இதனால் அனைவரும் இந்த படத்தின் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த படம் இன்று வரை அவர்களுக்கு ஏமாற்றம் கொடுத்து வருகிறது.

இந்த மாதம் பொங்கல் தினத்தன்று ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில். விடாமுயற்சி படம் வருகிறது, அதனால் தியேட்டர் கிடைப்பது சிரமம் என ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் விடாமுயற்சி படமும் ரிலீஸ் ஆகவில்லை.

அதன் பின் ஜனவரி 30ஆம் தேதி ரிலீஸ் இன்று கூறினார்கள் ஆனால் இப்பொழுது அதுவும் இல்லை இது மார்ச் 27ஆம் தேதிக்கு பொத்திவைக்கப்பட்டுள்ளது. நல்ல படம் என்றால் எந்த பெரிய ஹீரோக்கள் படத்தை பற்றி பயப்படத் தேவையில்லை. ஆனால் இவர்கள் ஏன் இப்படி தள்ளித்தள்ளி வைக்கிறார்கள் என்று தெரியவில்லை. மொத்தத்தில் வீரதீர சூரன் கோழையாய் மாறிவிட்டார்.

Trending News