Nayanthara: நயன்தாரா என்ற வார்த்தைக்கு சர்ச்சை என்று கூட அர்த்தம் கொள்ளலாம். அந்த அளவுக்கு சோசியல் மீடியாவில் அவர் என்ன செய்தாலும் அது ஒரு சர்ச்சையாகி விடுகிறது.
அப்படித்தான் சமீபத்தில் அவர் தன்னுடைய ஃபெமி 9 விழாவில் கலந்து கொண்டார். மதுரையில் நடைபெற்ற இந்த விழாவில் நயன்தாரா கலந்து கொண்டது மட்டுமின்றி அங்கு நடந்த சம்பவங்களும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
அதிலும் அங்கு இருந்தவர் நயன்தாராவை புகழும் வகையில் அவர்கள் நார்மல் மனிதர்கள் கிடையாது என ஓவராக அலப்பறை கொடுத்திருந்தார். அதை நெட்டிசன்கள் கடுமையாக எதிர்த்து ட்ரோல் செய்து வருகின்றனர்.
பரபரப்பை கிளப்பிய பத்திரிக்கையாளர்
அது மட்டும் இன்றி காலை 9 மணிக்கு வரவேண்டிய நயன் மதியம் மூன்று மணிக்கு தான் வந்திருக்கிறார். இவ்வளவு நேரம் மக்களை காக்க வைத்த அவர் சில எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறார்.
இதைப் பற்றி கூறியிருக்கும் வலைப்பேச்சு பிஸ்மி நயன்தாரா புகழுக்கு அடிமையாகி விட்டார். எல்லோரும் தன்னை புகழ வேண்டும் தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டும் என விரும்புகிறார்.
அப்போதிலிருந்தே அவர் அப்படித்தான். தற்போது அனைத்தும் வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. இப்படி புகழ்ச்சிக்கு அடிமையானவர்கள் நோயாளிகள் தான் என விமர்சித்துள்ளார்.
ஏற்கனவே நயன்தாரா வலைப்பேச்சு பிரபலங்களை குரங்குகள் என குறிப்பிட்டு இருந்தார். அதற்கு இவர்கள் பதில் கொடுத்து இருந்தாலும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் நயன்தாராவை விமர்சித்து வருகின்றனர்.