புதன்கிழமை, ஜனவரி 22, 2025

இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் 5 படங்கள்.. டிராக்டை மாற்றி சுந்தர் சி செய்யும் அட்ராசிட்டி

பொங்கலுக்கு பின் இந்த வாரம் தான் தியேட்டர்கள் அனைத்தும் மீண்டும் கலைக்கட்டி உள்ளது. நாளை மறுநாள் தியேட்டரில் 5 தமிழ் படங்கள் ரிலீசாக உள்ளது. சுந்தர் சி மற்றும் குட் நைட் மணிகண்டன் போன்றவர்கள் நடிப்பில் படங்கள் வெளிவர இருக்கிறது. 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகும் படங்கள்.

பாட்டில் ராதா: இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி தற்போது தான் சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தில் குரு சோமசுந்தரம், காஞ்சனா நடராஜன், ஜான் விஜய் போன்றவர்கள் நடித்துள்ளனர். நாளை மறுநாள் இந்த படம் ரிலீஸ் ஆகிறது

குடும்பஸ்தன்: புதுமுக இயக்குனர் ராஜேஸ்வரி காளி சாமி இந்த படத்தை இயக்கியுள்ளார். லோன், இஎம்ஐ என கஷ்டப்படும் குடும்பஸ்தன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மணிகண்டன். குட் நைட், லவ்வர் படத்திற்கு பிறகு மணிகண்டன் ஹீரோவாக நடிக்கும் படம் இது

வல்லான்: மணி சேயான் இயக்கத்தில் சுந்தர் சி இதில் ஹீரோவாக நடித்துள்ளார். இது ஆக்சன் கலந்த திரில்லர் படமாக வெளிவர இருக்கிறது. அரண்மனை, காமெடி என்ற டிராக்டில் போய்க்கொண்டிருந்த சுந்தர் சி தற்போது ரூட்டை மாற்றி உள்ளார்.

குழந்தைகள் முன்னேற்ற கழகம்: யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தை சங்கர் தயாள் இயக்கியுள்ளார். இதுவும் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது. இந்த வருடம் யோகி பாபு ஹீரோவாக களமிறங்கும் முதல் படம் இது.

மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்: Youtube புகழ் ஹரிபாஸ்கர் மற்றும் பிக் பாஸ் லாஸ்ட்லியா இருவரும் சேர்ந்து நடித்துள்ள படம் இது. முழு நீள நகைச்சுவையாக இந்த படம் வெளிவர இருக்கிறது. ஹரிபாஸ்கர் youtube சேனல் மூலம் நிறைய ரசிகர்களை கொண்டவர்.

Trending News