வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் 5 இடத்தைப் பிடித்த சீரியல்கள்.. சன் டிவி சீரியலை பின்னுக்கு தள்ளிய விஜய் டிவி

Serial Trp Rating List: சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மனதில் ஒய்யாரமாக இடம் பிடித்திருப்பது சன் டிவி சீரியல் தான். அதனாலேயே ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஆறு இடத்தை சன் டிவி சேனல் பிடித்து விடும். ஆனால் இந்த முறை சில மாற்றங்கள் ஏற்பட்டு சன் டிவி சீரியலை பின்னுக்கு தள்ளும் வகையில் விஜய் டிவி சீரியல் ஒரு படி முன்னேறி இருக்கிறது. அது என்ன சீரியல்கள் எவ்வளவு புள்ளிகளை பெற்றிருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

சிங்க பெண்ணே: அன்புவின் அம்மாவிற்கு தன் பக்கத்தில் இருந்து தன்னை பார்த்துக்கொண்டது கொண்டது யாழினி தான் என்று நினைக்கிறார். ஆனால் யாழினி இல்லை ஆனந்தி தான் என்று தெரிய வரும் பொழுது ஆனந்தியின் உண்மையான குணமும் அக்கறையும் புரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. இதற்கிடையில் மகேஷின் நினைவுச் சின்னமாக பாதுகாத்துக் கொண்டிருந்த பொருளை வார்டனிடம் இருந்து மித்ரா திருடி கொண்டார். இதனால் பரிதவித்து இருக்கும் வார்டன் மனநிலை புரிந்துகொண்டு ஆனந்தி நிச்சயம் அந்த பொருளை கண்டுபிடித்து ஒப்படைப்பார். அத்துடன் இந்த ரகசியமும் வெளிவர வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.21 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறது.

மூன்று முடிச்சு: நந்தினிக்கு பிரச்சனை கொடுத்து சூர்யா வாழ்க்கைக்குள் நந்தினி வராதபடி சுந்தரவல்லி சதி செய்தார். ஆனால் சூர்யா தன்னுடைய பொண்டாட்டி மீது எந்த தவறும் இருக்காது என்ற நம்பிக்கையில் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே கூட்டிட்டு வர வேண்டும் என்று முயற்சி செய்தார். அந்த வகையில் சூர்யாவுக்கு கிடைத்த ஆதாரத்தை வைத்து நந்தினியை காப்பாற்றி விட்டார். இதனை எதிர்பார்க்காத சுந்தரவல்லி ஏமாற்றமடைந்து மொத்த கோபத்தையும் காட்டுவதற்கு வெறிகொண்டு இருக்கிறார். அந்த வகையில் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.19 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

கயல்: தேவி வளைகாப்பில் எப்படியாவது தேவியின் கணவரை கூட்டிட்டு வந்து குடும்பத்தை ஒன்று சேர்த்து விடுவேன் என்று கயல் வாக்கு கொடுத்திருந்தார். ஆனால் அதற்குள் மூர்த்தி செய்த காரியத்தால் அன்பு ஜெயிலுக்குப் போகும் நிலைமை வந்துவிட்டது. போலீசாக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் அன்புக்கு எந்தவித பிரச்சனையும் வராமல் காப்பாற்ற வேண்டும் என்று தற்போது கயல் போராடி வருகிறார். இப்படி தொடர்ந்து கயல் ஒவ்வொரு பிரச்சினை சமாளித்து வரும் நிலையில் எழில் அவருடைய சந்தோஷத்தையே மறந்து விட்டார். அந்த வகையில் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

சிறகடிக்கும் ஆசை: பல மாதங்களுக்குப் பிறகு டிஆர்பி ரேட்டிங்கில் நான்காவது இடத்தை சிறகடிக்கும் ஆசை சீரியல் பிடித்திருக்கிறது. இதற்கு காரணம் பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதற்கு ஏற்ப பல தில்லாலங்கடி வேலைகளை பார்த்து வந்த ரோகினி கொஞ்சம் கொஞ்சமாக முத்துவிடம் மாட்டிக் கொண்டு தவிக்கிறார். அந்த வகையில் ரோகிணி பற்றிய ரகசியங்களை கண்டுபிடிக்கும் விதமாக முத்து மற்றும் மீனா மும்முரமாக வேலையில் இறங்கி விட்டார்கள். இதனால் இனி கூடிய சீக்கிரத்தில் ரோகினி கையும் களவுமாக மாட்டப் போகிறார். அந்த வகையில் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 8.19 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்திற்கு வந்திருக்கிறது.

மருமகள்: ஆதிரை பிரபு கல்யாணத்துக்கு பிறகு ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்தாலும் அப்பா பக்கத்தில் இருக்கும் ஒரு தன்னம்பிக்கையில் ஆதிரை இவ்வளவு நாள் போராடி வந்தார். ஆனால் சித்தி செய்த சதியால் அப்பாவிடம் பேச முடியாமல் போய்விட்டதே என்று மனம் உடைந்து போய்விட்டார். அதிலும் தற்போது அப்பா முடியாமல் ஆஸ்பத்திரியில் இருக்கும் பொழுது கூட சித்தி பார்க்க விடாமல் தடுக்கிறார் என்றதும் ஆதிரை பொருத்தது போதும் என்று பொங்க ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் தொடர்ந்து பிரச்சினைகளையும் சிக்கல்களையும் சந்தித்து வரும் பிரபு மற்றும் ஆதிரைக்குள் சந்தோசமான வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 8.03 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து ஆறாவது இடத்தில் 7.70 புள்ளிகளை பெற்ற அன்னம் சீரியலும், 7.56 புள்ளிகளை பெற்ற ராமாயணம் சீரியலும் இடம்பெற்றிருக்கிறது.

Trending News