4 மாதங்களுக்கு முன்பு ஒட்டுமொத்த சமூக வலைத்தளமே சிறுத்தை சிவாவை தான் வருத்தெடுத்துக் கொண்டிருந்தது. எல்லாத்துக்கும் காரணம் இவர் இயக்கிய கங்குவா படம் தான். பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த படம் படு மொக்கை வாங்கியது.
இப்போது வரை சிறுத்தை சிவா என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது இந்த ப்ளாப்பான கங்குவா படம் தான். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த சிறுத்தை சிவா இப்பொழுது மீண்டும் தனது வேலையை தொடங்கியுள்ளார்.
கங்குவா படம் ப்ளாப்பானதால் இவர் பக்கமே எந்த ஒரு தயாரிப்பாளரும் தலை வைத்து படுக்கவில்லை. அடுத்த படங்களுக்கு கதை இருந்தும் கூட ப்ரொடியூசர் கிடைக்காமல் மிகவும் விரக்தியில் இருந்து வந்தார். இந்நிலையில் தான் பழைய நண்பன் ஒருவர் தோள் கொடுத்துள்ளார்.
சிறுத்தை சிவா மற்றும் அஜித் குமார் இருவரும் சினிமாவையும் தாண்டி நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். அஜித்தை வைத்து சிறுத்தை சிவா வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்களை இயக்கியுள்ளார். இந்த 4 படங்கள் மூலம் இருவரும் நல்லதொரு நட்பாய் பழகி வருகிறார்கள்.
இப்போது அஜித் துபாயில் இருக்கிறார். அக்டோபர் மாதம் தான் மீண்டும் இந்தியா வருகிறார். ஏற்கனவே சிவா உடன் போனில் பேசி உள்ளார். எதற்கும் கவலைப்பட வேண்டாம் அடுத்து ஒரு படம் இணைந்து பண்ணலாம் என அஜித் சிவாவிற்கு ஆறுதல் கூறியுள்ளார். அக்டோபருக்கு பின் இவர்கள் கூட்டணியில் படம் உருவாக இருக்கிறது.