Nayanthara: ஹீரோவுக்கு நிகரான அந்தஸ்துடன் கெத்தாக வலம் வந்தார் நயன்தாரா. ஆனால் இப்போது அவர் அதிகம் விமர்சிக்கப்படும் பிரபலமாக மாறி இருக்கிறார்.
இதற்கு காரணம் அவருடைய சமீப கால நடவடிக்கைகள் தான். அதிக பப்ளிசிட்டி தேடுவதில் தொடங்கி தனுஷ் குறித்து பதிவிட்டது வரை அனைத்துமே அவருக்கான பின்விளைவாக அமைந்தது.
அதன் காரணமாகவே அவருக்கான ஹேட்டர்கள் அதிகமாகி விட்டனர். சோசியல் மீடியாவில் நயன்தாராவின் ஆட்டிட்யூட் குறித்து வெளிப்படையாகவே எதிர்மறை கருத்துக்கள் பரவி வருகிறது.
லேடி சூப்பர் ஸ்டார் நிலை இப்படி ஆயிடுச்சே
இந்நிலையில் அவர் நடித்துள்ள டெஸ்ட் படம் நேரடியாக ஓடிடி தளத்திற்கு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது. மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் என பல பிரபலங்கள் இதில் நடித்துள்ளனர்.
சசிகாந்த் இயக்கத்தில் உருவான இப்படம் தற்போது நேரடியாக netflix தளத்தில் வெளியாக இருக்கிறது. ஏப்ரல் இறுதி அல்லது மே முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பெரிய ஸ்டார்கள் நடித்திருந்தும் கூட ஏன் தியேட்டரில் ரிலீஸ் ஆகவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆனால் எதிர்பார்த்த வியாபாரம் ஆகாததால் தயாரிப்பாளர் தான் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார். இதில் படத்தில் நடித்த நடிகர்களுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை.
இருப்பினும் வேறு வழியில்லாததால் இப்படி ஒரு முடிவுக்கு சம்மதித்திருக்கின்றனர். ஏற்கனவே நயன்தாராவின் திரை வாழ்வு டல் அடிப்பதாக பேச்சு இருக்கிறது.
அதில் அவருடைய படம் தியேட்டருக்கு வராதது சில விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் அவருடைய மார்க்கெட் குறைந்து விட்டதாகவும் பேசப்பட்டு வருகிறது.