வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

வியூசுக்காக என்ன வேணா பண்ணுவீங்களா.. விஷால் மீது அவதூறு, அதிரடியாக இறங்கிய தலைவர்

Vishal: விஷால் நடிப்பில் 12 வருடங்களுக்கு முன்பு வெளியாக வேண்டிய மதகஜராஜா இந்த வருட பொங்கலுக்கு வெளியானது. சுந்தர் சி, சந்தானம் கூட்டணியில் இப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

அதைத்தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி இணைய இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க படத்திற்கு மிகப்பெரிய பிரமோஷன் ஆக இருந்தது விஷால்தான்.

படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்வுக்கு கடுமையான காய்ச்சலோடு அவர் வந்திருந்தார். அப்போது கையில் மைக்கை கூட பிடிக்க முடியாதபடி அவர் இருந்தது மீடியாவின் கண்களில் சிக்கியது.

அதைத்தொடர்ந்து விஷாலுக்கு என்ன ஆச்சு அவர் சீக்கிரம் சரியாக வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வந்தனர். ஆனால் சில யூடியூப் சேனல்கள் கொஞ்சம் அதிகப்படியான செய்திகளை பரப்பியது.

அதிரடியாக இறங்கிய தலைவர்

விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் நரம்பு தளர்ச்சி போன்ற பல காரணங்களை செய்தியாக வெளியிட்டது. ஆனால் விஷால் அதற்கு மறுப்பு தெரிவித்து இருந்தார்.

மதகஜராஜா வெற்றி விழாவில் நான் நன்றாக இருக்கிறேன். ஆனால் சிலர் தேவையில்லாத வதந்திகளை பரப்புகிறார்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதைத்தொடர்ந்து தற்போது விஷால் மீது அவதூறாக பேசிய யூடியூப் சேனல்கள் மற்றும் பேட்டி கொடுத்தவர்கள் மீது நடிகர் சங்க தலைவர் நாசர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதை அடுத்து தேனாம்பேட்டை போலீசார் தற்போது விசாரணையில் இறங்கி இருக்கின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் சேனல்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

Trending News