நடிப்பு அசுரன் தனுஷ் இப்பொழுது இயக்குனர் அசுரனாய் மாறிவிட்டார். இதுவரை இரண்டு படங்கள் இயக்கியுள்ளார். பா பாண்டி. ராயன் இந்த இரண்டு படங்களுமே அவருக்கு நல்ல ஒரு இயக்குனர் என்ற அந்தஸ்தை கொடுத்துள்ளது. இன்னும் இரண்டு படங்கள் இயக்கி வருகிறார்.
தனுஷ் இயக்குனராக அறிமுகமான முதல் படம் பா பாண்டி. இந்த படத்தை தனுஷும், ராஜ்கிரனும் தோளில் தூக்கி சுமந்து அந்தர் பண்ணியிருப்பார்கள். அதன் பின் தனுஷ் இயக்கிய படம் ராயன். இந்த இரண்டாவது படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
சன் பிக்சர்ஸ் தயாரித்த ராயன் படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. இதனால் தனுசை இயக்குனராகவே வைத்து இன்னும் ஒன்றிரண்டு படங்களை தயாரிப்பதற்கு சன் பிக்சர்ஸ் முன் வந்தது. 90 கோடிகளில் எடுக்கப்பட்ட ராயன் படம் மொத்தமாய் 160 கோடிகள் வசூலித்தது.
இப்போது தனுஷ் தன்னுடைய அடுத்த படங்களான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ரிலீஸ் ஆக உள்ளது. படம் செம ஹியூமராக இருக்கிறதாம். படத்தை பார்ப்பவர்கள் செம ஜாலியாக சிரித்து விட்டு தான் வருவார்களாம்.
இதை எஸ் ஜே சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தொடர்ந்து அவரும் தனுஷ் உடன் நிறைய படங்களில் பயணித்து வருகிறார். தனுசுக்கு பந்தய ஜாக்கி குதிரை போல் உடன் இருக்கிறார் எஸ். ஜே. சூர்யா. ராயன் படத்தில் வில்லன் கதாபாத்திரம் பண்ணியவரும் இவர்தான்.