செவ்வாய்க்கிழமை, மார்ச் 18, 2025

இளையராஜா பயோபிக் வருமா வராதா.? ரெண்டே மாதத்தில் வெளிவரும் தனுஷின் 3 படங்கள்

இளையராஜாவின் பயோபிக்-கில் தனுஷ் நடித்து வந்தார். தற்போது இந்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது அதற்கு முக்கிய காரணம் தனுஷ் வைத்த முக்கியாமான கோரிக்கை தானாம்.

அதாவது லக்ஸ் கார்னர், டி நகர், சென்னை சென்ட்ரல் ஆகிய இடங்கள் 70-களில் எப்படி இருக்குமோ அதே போன்ற ஒரிஜினல் செட் போட வேண்டும் என்று தனுஷ் கேட்டுள்ளார்.

ஆனால் தயாரிப்பு நிறுவனம் கிரீன் மேட் போட்டு எடுத்து விடலாம் என்று கூற அதற்கு மறுப்பு தெரிவித்து படப்பிடிப்பை நிறுத்திவிட்டாராம் தனுஷ்.

எல்லாமே ஒரிஜினலாக இருக்க வேண்டும் என்பதால் கிரீன் மேட் வேண்டாம் என படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏனென்றால் இளையராஜாவை இந்த தலைமுறைக்கு காட்ட வேண்டும் என்பதே தனுஷின் ஆசை. அடுத்த மாதத்தில் தனுஷின் NEEK (Feb – 07), குபேரா (Feb 21) மற்றும் ஏப்ரலில் இட்லி கடை(April 10) போன்ற படங்கள் வெளிவர உள்ளது.

அதிக எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது சேகர் கம்புல்லா இயக்கத்தில் தனுசுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ள குபேரா. நாகார்ஜுனா இதுல முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தொடர்ந்து மூன்று நான்கு வருடங்களுக்கு பிஸியாக இருக்கும் தனுஷ் இளையராஜாவின் பயோபிக் முடிப்பது கடினம் தான் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Advertisement Amazon Prime Banner

Trending News