சனிக்கிழமை, பிப்ரவரி 1, 2025

அஜித்துடன் மோதிப் பார்க்கத் துணிந்த தனுஷ்.. கூட்டு சேர்ந்த ஹீரோ, வைரல் போஸ்டர்

Ajith-Dhanush: அஜித் நடித்துள்ள விடாமுயற்சி இன்னும் சில தினங்களில் திரைக்கு வருகிறது. பொங்கலுக்கு வரவேண்டிய படம் சில தாமதத்தால் தற்போது வெளியாகிறது.

idlikadai
idlikadai

இதை கொண்டாடுவதற்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதேபோல் அவர் நடித்து வரும் குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகிறது.

ஆக அடுத்தடுத்து அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட் தான். இந்நிலையில் தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லி கடை படமும் ஏப்ரல் 10ம் தேதியை குறி வைத்துள்ளது.

அஜித்துடன் மோதிப் பார்க்கத் துணிந்த தனுஷ்

அதற்கான போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. அது மட்டும் இன்றி அந்த போஸ்டரில் அருண் விஜய் பாக்சர் கெட்டப்பில் இருக்கிறார்.

இந்த செய்தியை பட குழு இத்தனை நாள் படு சீக்ரட்டாக வைத்திருந்தது. தற்போது அந்த ரகசியம் உடைந்த நிலையில் அட இது எதிர்பார்க்காத கூட்டணியா இருக்கே என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

மேலும் ஏப்ரல் 10 செம சம்பவம் இருக்கு. அஜித்துக்கு வில்லனாக நடித்த அருண் விஜய் தற்போது தனுஷ் உடன் இணைந்து அவருடன் மோதுகிறார்.

இப்படி ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகின்றனர். அதிலும் அந்த போஸ்டரில் தனுஷ் அருண் விஜய்க்கு உதவியாளர் போன்ற லுக்கில் இருப்பதும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Trending News