ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 2, 2025

சிவகார்த்திகேயன் படத்துல நடிக்கணும்னு ரவி மோகன் ஒத்துக்கல.. பிரபலம் சொன்ன யோசிக்க வைக்கும் காரணம்

Sivakarthikeyan: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து விட்டது.

பராசக்தி படத்தின் டைட்டில் டீசர் வெளியானதில் இருந்தே இந்த படத்தின் ஆர்வம் மக்களிடம் பற்றி கொண்டது.

போதாத குறைக்கு சிவகார்த்திகேயன் படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்தது பெரிய சர்ச்சையையும் கிளப்பி விட்டிருக்கிறது.

மார்க்கெட் இல்லாத காரணத்தால் தான் ரவி இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கிறார் என்று கூட பேசப்பட்டது.

பிரபலம் சொன்ன யோசிக்க வைக்கும் காரணம்

இது எல்லாத்திற்கும் பதில் சொல்லி இருக்கிறார் வலைப்பேச்சு அந்தணன். சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என ஜெயம் ரவி இந்த படத்தை ஒத்துக் கொள்ளவில்லை.

இறுதிச்சுற்று, சூரரை போற்று போன்ற படங்களை கொடுத்த இயக்குனர் சுதா தான் ரவி இந்த படத்திற்குள் வர காரணம்.

அதுவும் இல்லாமல் எட்டச்சக்க கண்டிஷன் போட்டு தான் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டிருக்கிறார். அதில் முக்கியமான ஒன்று ஹீரோ வில்லனை அடிக்கும் காட்சி இருக்கவே கூடாது என்று சொல்லிவிட்டாராம்.

படத்தின் கதையை பொருத்தவரைக்கும் சிவகார்த்திகேயன் மற்றும் ரவி ஒருவரை ஒருவர் மோதிக் கொள்ளும் ஆக்சன் காட்சிகள் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று அந்தணன் சொல்லி இருக்கிறார்.

நாம் முன்பு சொன்னது போல் முழுக்க முழுக்க இந்த படம் கல்லூரி மாணவர் ராஜேந்திரனின் வாழ்க்கை வரலாறு. அந்த கதையை பொருத்தவரைக்கும் ராஜேந்திரனை கடைசியாக சுட்டுக் கொல்லும் போலீஸ்காரரின் கேரக்டரில் தான் ரவி நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

Trending News