Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், பெண்களை அடிமையாக வைக்க வேண்டும் அதுவும் இப்போ உள்ள காலத்தில் படித்து விட்டோம் என்ற நினைப்பில் இருக்கும் பெண்களை அடுப்பாங்கரையில் வேலை பார்க்க வைக்க வேண்டும் என்று குணசேகரன் வக்ர புத்தியில் பிளான் போட்டார். அதன்படி வீட்டிற்கு படித்த நான்கு மருமகளை கூட்டிட்டு வந்து அடிமைத்தனமாக வைத்திருந்தார்.
ஆனால் ஜனனி, உங்களுடைய ஆணாதிக்க திமிரை நான் அடக்கி காட்டுவேன் என்று குணசேகரனுக்கு எதிராக போராடி அவரை ஜெயிலுக்கு அனுப்பி விட்டார். தற்போது குணசேகரன் வீட்டிற்கு வந்த நான்கு மருமகளும் அவர்களுடைய இலட்சியத்தை நோக்கி போராடி சொந்த காலில் நின்னு வெற்றி பெற வேண்டும் என்று ஒவ்வொரு முயற்சியாக எடுத்து வருகிறார்கள்.
அதில் தற்போது முதல் வெற்றியாக நந்தினிக்கு மசாலா பொடி தயாரிக்கும் ஆர்டர் ஒன்று கிடைத்திருக்கிறது. இது நந்தினிக்கு கிடைத்த முதல் வெற்றியாக இருந்தாலும் பார்ப்பவர்களை ஒரு ஊக்கத்துடன் முன்னேற வைப்பதற்கு படிக்கற்களாகத்தான் அமைகிறது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் நந்தினியை சந்தோஷப்படுத்தி நான்கு பெண்களும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.
அதே ஒற்றுமையுடன் அடுத்தடுத்து ஒவ்வொரு வெற்றியையும் கொடுக்கப் போகிறார்கள். இதற்கு இடையில் கதிர் ஏதோ ஒரு வில்லங்கதனம் பண்ணுகிறார் அதை கண்டுபிடிக்க வேண்டும் என்று சக்தி முயற்சி எடுக்கிறார். இவருடன் கூட்டணி சேர்ந்து கரிகாலன் கதிர் பண்ணுகிற வேலையை கண்டுபிடிக்க வேண்டும் என்று கைகோர்த்து விட்டார்.
அந்த வகையில் சக்தி ஒரு ஆளை ஏற்பாடு பண்ணி கதிரின் மாமனாருக்கு போன் பண்ணி வட்டிக்கு 5 லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்கிறார். உடனே அவரும் கதிரை கூட்டிட்டு வந்து விடுகிறார். அப்பொழுது கதிர் அந்த நபரிடம் பணம் கொடுப்பதற்கு முன் உனக்கு எப்படி நாங்கள் வட்டிக்கு பணம் கொடுக்கிறோம் என்று தெரியும் என கேட்கிறார்.
அதற்கு சக்தி, கதிரின் முகத்திரையை கிழிக்க நான்தான் சொன்னேன் என்று கெத்தாக வந்துவிட்டார். அந்த வகையில் முக்கால்வாசி கதிர் என்ன அட்டூழியம் பண்ணி வருகிறார் என்ற விஷயம் கதிர் தெரிந்து கொண்டார். இதை வைத்து வீட்டில் இருப்பவர்களிடம் கதிர் பண்ணும் விஷயங்களை சொல்லி இதற்குப் பின்னணியில் கதிரின் மாமனார் தான் இருக்கிறார் என்று போட்டு உடைக்க போகிறார்.
தற்போது நந்தினி ஜெயித்து விட்டோம் என்ற சந்தோஷத்தில் இருந்தாலும் கதிர் மற்றும் தன்னுடைய அப்பாவும் சேர்ந்து இப்படி குட்டிச்சுவராக போகிறார்கள் என்ற நினைப்பில் கதிரை இனி அடுத்து எந்த தவறான விஷயங்களையும் செய்ய வைக்க கூடாது என்பதற்கு ஏற்ப நந்தினி தடுக்க போகிறார். ஆனாலும் கதிர் யார் பேச்சையும் கேட்காமல் மாமனார் பேச்சை மட்டும் கேட்டு படுகுழியில் விழப் போகிறார். கதிரை ஓவராக நம்பிய குணசேகரனுக்கு இதுதான் விழப்போகும் பெரிய அடியாக இருக்கும்.