திங்கட்கிழமை, பிப்ரவரி 3, 2025

கல்லா கரைந்ததால் நயன்தாராவை வைத்து பரமபதம் ஆடிய விக்னேஷ் சிவன்.. 2, 3 தூண்டிலில் சிக்கிய லலித்

விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதனே வைத்து LIK(Love insurance Kompany))என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் இந்த படத்தை இயக்கி வந்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித், படத்தின் பட்ஜெட் அதிகமானதால் இந்தப் படத்திலிருந்து பின் வாங்கினார்.

இந்தப் படத்திற்கு பிரதீப் ரங்கநாதனுக்கு சம்பளமே 15 கோடிகள் வரை கொடுத்திருக்கிறார்கள். படம் நாளுக்கு நாள் ஜவ்மிட்டாய் போல் இழுத்துக் கொண்டே போனதால் பட்ஜெட்டும் அதிகமானது, இதனால் லலித் இந்த படத்திலிருந்து பின் வாங்கி விட்டார். அதன் பிறகு விக்னேஷ் சிவன் தன்னுடைய ரவுடி பிக்சர்ஸ் மூலம் தயாரித்து வந்தார்.

இப்பொழுது அவரிடமும் கல்லா கரைந்து போனது. இந்த படத்தை மேற்கொண்டு எடுப்பதற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் நயன்தாராவை வைத்து இந்த பண பற்றாக்குறை சமாளித்து வருகிறார் விக்னேஷ். லலித்திடமே சென்று பைசா கேட்டு தயாரித்து வருகிறார்.

ஏற்கனவே கவின் மற்றும் நயன்தாரா ஹாய் என்ற படத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை லலித் தயாரிக்கிறார். இந்த படத்தில் நயன்தாராக்கு வர வேண்டிய சம்பளத்தை கேட்டு வருகிறார் விக்னேஷ் சிவன். இதன் மூலம் LIK படத்தின் பண பிரச்சனையை சமாளித்து விடலாம் என திட்டம் போட்டு செய்துள்ளார்.

ஹாய் படத்திற்கு லலித் தரப்பிலிருந்து நயன்தாராவுக்கு சம்பள தொகை கொடுத்துள்ளனர். ஆனால் வர் கால்ஷீட் கொடுக்காமல் இழுத்து அடித்து வருகிறார். காசையும் வாங்கிக் கொண்டு அவர்கள் எடுக்கும் படத்தை மட்டும் தடையில்லாமல் கொண்டு செல்கிறார்கள். லலித்திற்கு மட்டும் பட்ட நாமத்தை போட்டு விட்டார்கள்.

Trending News