Ajith-Good Bad Ugly: அஜித் நடிப்பில் பல வருடங்களாக உருவாகி வந்த விடாமுயற்சி இன்னும் சில தினங்களில் திரைக்கு வருகிறது. இதற்கான ப்ரீ புக்கிங் ஆரம்பித்த நிலையில் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
அதேபோல் ஏப்ரல் மாதம் குட் பேட் அக்லி ரிலீசாக இருக்கிறது. பொங்கலுக்கே வரவேண்டிய படம் விடாமுயற்சியால் தள்ளிப்போனது.
ஆனாலும் ரசிகர்களை ஏமாற்றாமல் பல சர்ப்ரைஸ் படத்தில் இருக்கிறதாம். அதில் தற்போது ஒரு தகவல் கசிந்துள்ளது.
அதாவது இப்படத்தில் அஜித்தின் தீனா படத்தில் அனைவரையும் ஆட்டம் போட வைத்த வத்திக்குச்சி பத்திக்காதுடா பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளதாம்.
ஆதிக்கின் ஃபேன் பாய் சம்பவம்
ஏற்கனவே ஆதிக், மார்க் ஆண்டனி படத்தில் பஞ்சுமிட்டாய் பாடலை ரீமிக்ஸ் செய்திருந்தார். அதற்கு பயங்கர ரெஸ்பான்ஸ் கிடைத்தது.
அதேபோல் ஒரு ஃபேன் பாயாக தீனா பாடலை அவர் பயன்படுத்தி இருப்பது நிச்சயம் வரவேற்கப்படும். அஜித் ரசிகர்கள் இதை தியேட்டரில் கொண்டாடி தீர்த்து விடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
தற்போது படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. விடாமுயற்சி ரிலீஸ்க்கு பின் அடுத்தடுத்த அப்டேட் கொடுத்து ரசிகர்களை திக்கு முக்காட செய்யவும் பட குழு திட்டமிட்டுள்ளது.