தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் கடும் பிசியாக இருந்தாலும், அந்த இயக்குனர் வந்தால் ஓகே தான் என்று ஏங்கி கிடக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு அடுத்தடுத்த ரூட் கிளியராகி பிரகாசமான காம்பினேஷன் உருவாக போகிறது. அதற்காக தயாரிப்பாளர்கள் தூது போய் உள்ளனர்.
7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் லலித், ஹச் வினோத் மற்றும் தனுஷ் காம்பினேஷனில் ஒரு படம் பண்ணுவதாக இருந்தார் ஆனால் வினோத், விஜய்யின் ஜனநாயகன்படத்துக்கு சென்று விட்டதால் அந்த இடம் காலியாக இருக்கிறது. இதை வைத்து ஒரு கணக்கு போட்டுள்ளார்.
எச் வினோத் இடத்துக்கு லோகேஷ் கனகராஜை கொண்டுவர ஏற்பாடு செய்து வருகிறார் லலித். லோகேஷ் கைதி 2 படம் முடித்த பிறகு இவருடன், தனுஷ் காம்பினேஷன் பண்ணலாம் என திட்டம் போடுகிறார். தனுஷும், லோகேஷ் கனகராஜ் என்றால் டபுள் ஓகே என பச்சைக்கொடி காட்டியுள்ளார்.
இதை போல் பிசியாக இருக்கும் சிவகார்த்திகேயன் அடிக்கடி லோகேஷ்சுடன் டிராவல் செய்து வருகிறார். இருவரும் பார்ட்டிக்கு போவது, குடும்பத்துடன் சந்தித்துக் கொள்வது என இவர்களுக்குள் ஒரு புரிதல் போய்க்கொண்டிருக்கிறது. இந்த காம்பினேஷனும் அடுத்த லைன் அப்பில் உருவாக வாய்ப்பு இருக்கிறது.
தயாரிப்பாளர்களாகிய பேஷன் ஸ்டுடியோஸ் மதன் மற்றும் ஜெகதீஸ் பழனிச்சாமி, இயக்குனர் லோகேஷ் என அனைவரும் நண்பர்கள். எந்த பார்ட்டியா இருந்தாலும் பெரும்பாலும் இவர்களை ஒன்றாக பார்க்கலாம். இதனால் அடுத்து சிவகார்த்திகேயன், லோகேஷ் காம்பினேசனும் பிரகாசமாக தெரிகிறது.