புதன்கிழமை, பிப்ரவரி 5, 2025

ஜனநாயகன் படத்துக்கு துண்டு போட்ட பெரிய தலைகள்.. கோடிகளை கொடுத்து WW விநியோக உரிமையை தட்டி தூக்கிய நிறுவனம்

Jana Nayagan: விஜய்யின் கடைசி படத்தை இயக்கும் வாய்ப்பு எச் வினோத்துக்கு கிடைத்திருக்கிறது. ஜனநாயகன் என பெயரிடப்பட்டிருக்கும் இப்படம் முழு அரசியல் சார்ந்த கதை என்பது பெயரிலேயே தெரிகிறது.

சமீபத்தில் இந்த டைட்டிலை அறிவித்ததோடு அட்டகாசமான போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டது. அதிலிருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது.

இந்நிலையில் இப்படத்தின் விநியோக உரிமை குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. அதன்படி தமிழ்நாட்டு விநியோக உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

அதைத்தொடர்ந்து ஓவர் சீஸ் உரிமையை 75 கோடிகள் கொடுத்து பார்ஸ் ஃபிலிம்ஸ் PHF நிறுவனம் தட்டி தூக்கி இருக்கிறது. யூரோப் உரிமம் 4 சீசன்ஸ் கிரியேஷன் நிறுவனத்துக்கு சென்றுள்ளது.

WW விநியோக உரிமையை தட்டி தூக்கிய நிறுவனம்

UK உரிமையை போலின் சினிமாஸ் பெற்றுள்ளது. இப்படியாக இந்த பெரிய நிறுவனங்கள் முதல் ஆளாக ஜனநாயகன் படத்துக்கு துண்டு போட்டு உரிமையை வாங்கி இருக்கின்றனர்.

அதன்படி இப்படத்தின் மொத்த பட்ஜெட் 500 கோடியாக இருக்கும் என தெரிகிறது. ஏனென்றால் விஜய்யின் சம்பளம் மட்டுமே 275 கோடியாக இருக்கிறது.

இருந்தாலும் படத்தை தயாரித்து வரும் KVN ப்ரொடக்ஷன் எப்படியும் கல்லா கட்டிவிடலாம் என்ற நம்பிக்கையில் பணத்தை தண்ணியாக செலவழித்து வருகிறது.

அதில் விநியோக உரிமை லாபத்தை கொடுத்துள்ள நிலையில் சேட்டிலைட், டிஜிட்டல், பாடல் ஆகியவற்றின் வியாபாரமும் அமோகமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Trending News