புதன்கிழமை, பிப்ரவரி 5, 2025

மூன்று முடிச்சு சீரியலில் சூர்யாவை கதறவிட்ட நந்தினி.. கல்யாணம் செய்யும் ரகலையில் ஜெயிக்கும் கிராமத்து தேவதை

Moondru Mudichu Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மூன்று முடிச்சு சீரியலில், சூர்யாவின் அப்பா நந்தினிடம் என் மகனை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்டு கொடுத்து விட்டால் எனக்கு ரொம்ப சந்தோஷம் அதை உன்னால் பண்ண முடியுமா என்று கேட்டார். அதற்கு நந்தினி என்னால் முடியும் அப்படி நான் செய்துவிட்டால் என்னை என்னுடைய கிராமத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.

அதற்கு சூர்யாவின் அப்பாவும் சரி என்று சொல்லிய நிலையில் களத்தில் இறங்கும் விதமாக நந்தினி, சூர்யா குடிக்கும் மது பாட்டில் அனைத்திலும் மதுவை தூர ஊத்திட்டு அதற்கு பதிலாக கசாயத்தை வைத்து விடுகிறார். இதனால் குழப்பத்தில் இருக்கும் சூர்யா புதுசாக எல்லா மது பாட்டில்களையும் வாங்குகிறார்.

அதிலும் மது இல்லாதபடி நந்தினி கசாயத்தை ஊற்றி விடுகிறார். இதனால் சந்தேகப்பட்ட சூர்யா அவருடைய நண்பர் நவீனை வரவழைத்து அவருக்கு அந்தப் பாட்டிலை கொடுக்கிறார். அவரும் குடித்துவிட்டு உண்மையான சரக்கு தான் என்று நம்ப வைப்பதற்காக குடிகாரன் மாதிரி டிராமா பண்ணி விடுகிறார்.

ஏனென்றால் அதற்கு முன்னாடியே நந்தினி, நவீனுக்கு போன் பண்ணி சூர்யாவை மாற்ற வேண்டும் என்றால் நீங்கள் எனக்கு உதவி பண்ண வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருந்தார். அதன்படி இவரும் நந்தினி சொன்னபடி சூர்யாவை நம்ப வைக்க மதுவை குடித்து விட்டு நடித்து விடுகிறார்.

பிறகு வீட்டிற்கு வந்த சூர்யா நமக்கு மட்டும் என்ன டேஸ்ட் வரமாட்டேங்குது மத்தவங்க எல்லாத்துக்கும் மதுவின் டேஸ்ட் தெரிகிறதே என்று புலம்ப ஆரம்பித்து விட்டார். அதனால் வீட்டில் வேலை பார்க்கும் கல்யாணம் அண்ணனையும் வரச் சொல்லி குடித்துப் பார்க்க சொல்லுகிறார்.

இவரிடமும் நந்தினி நடிக்க சொன்னதால் அந்த சரக்குகளை குறித்து விட்டு குடிகாரன் போல் சூர்யாவை நம்ப வைத்து விடுகிறார். இதனால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் சூர்யா நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்ன ஆச்சு என்று புரியாமல் புலம்பி போய் இருக்கிறார்.

இதனை தொடர்ந்து அர்ச்சனா, சூர்யாவுக்கும் நந்தினிக்கும் இடையில் இருக்கும் உறவு பற்றி தெரிந்து கொள்வதற்கு குடும்பத்தில் நடக்கும் விஷயங்களை அறிந்து கொள்ளவும் ரேணுகா என்ற நபரை வேவு பார்க்க அனுப்புகிறார். அதன்படி அர்ச்சனா போட்ட பிளானில் ரேணுகா டிராமா பண்ணி சூர்யா மற்றும் நந்தினி நம்ப வைத்து சுந்தரவல்லி வீட்டுக்கு போய் விடுகிறார்.

பிறகு சுந்தரவல்லியை சமாளித்து ரேணுகா அங்கே தங்கிய நிலையில் சூர்யாவின் ரூமை வீடியோ எடுத்து அர்ச்சனாவுக்கு அனுப்புகிறார். அந்த வகையில் சூர்யா மற்றும் நந்தினி இப்போது வரை தனியாக தான் தூங்குகிறார்கள் அவர்கள் இருவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நிம்மதி அடைந்து கொள்கிறார்.

அத்துடன் இந்த ரேணுகா மூலம் சூர்யா மற்றும் நந்தினிக்கு இடையே விரிசலை ஏற்படுத்தலாம் என சதி பண்ண போகிறார். இது எல்லாம் தாண்டி கிராமத்தில் தேவதையாக துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த நந்தினிக்கு கல்யாண வாழ்க்கையில் வெற்றி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News