மாஸ் ஹீரோ அஜித் இப்படி ஒரு படம் பண்ணனுமா என்பது தான் அனைவரது கேள்வியும். வழக்கமான மசாலா படங்கள் போல் இல்லாமல் புது முயற்சியில் மலையாள படம் போன்று பல சமாச்சாரங்களை இதில் கையாண்டு இருக்கின்றனர்.
சில நேரங்களில் தமிழ் சினிமாவை தாண்டி மலையாள படங்கள் பெயர் பெற்று விடுகிறது, உதாரணமாக ஐயப்பனும் கோஷியும் , டிரைவிங் லைசன்ஸ், த்ரிஸ்யம் போன்ற கதை அம்சம் உள்ள படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த வரிசையில் தான் இப்பொழுது இந்தப் படத்தை பார்க்க வேண்டும்.
ஹீரோயிசம் வேண்டாம் கதை, திரைக்கதை போதும் என்பதற்கு உதாரணமாக விடாமுயற்சியை சொல்லலாம். அஜித் ரசிகர்கள் அவரிடம் இருந்து ஒரு மாஸான ஆக்சன் படத்தை எதிர்பார்ப்பார்கள். ஆனால் இதில் அஜித் அதற்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்காமல் கிளாஸ் ஆக நடித்திருக்கிறார்.
சமீபத்தில் வெளியான கங்குவா படத்திலிருந்து ஒரு டிரெண்டு உருவாகி வருகிறது. கண்டமேனிக்கு ரிவியூ கொடுக்கின்றனர். நல்ல அனுபவம் உள்ள பிரபலமானவர்கள் கூட படத்தை சரியாக மதிப்பிடாமல் மோசமான ரிவ்யூவை கொடுத்து வருகிறார்கள். ஆனால் படம் நன்றாக தான் இருக்கிறது.
இனிவரும் காலங்களில் சினிமாவில் மசாலா படம் கை கொடுக்காது. புதிதாய் முயற்சி, கதைகள் என தேடினால் தான் ஒப்பேறும். அதற்கு உதாரணம் அஜித் எடுத்திருக்கும் இந்தமுயற்சி. நான் மாஸ் ஹீரோ என்று நினைக்காமல் இந்த மாதிரி கதைகளத்தை தேர்ந்தெடுத்ததற்கு அஜித்துக்கு ஹாட்ஸ்அப். இவ்வளவு ஏன் அட்டகத்தி தினேஷ் கூட கதைகளுக்காக தன்னை மாற்றி வேற லெவலில் தேர்வு செய்கிறார்.