Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், சென்னைக்கு போன கதிர் ராஜி வீட்டுக்கு வந்து விட்டார்கள். அந்த நேரத்தில் பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்களை வரவழைத்து பழனிவேலுவின் கல்யாண வேலையை பார்ப்பதற்கு பிரித்துக் கொடுக்கிறார். உடனே கதிர் இன்னைக்கு தானே நிச்சயதார்த்தம் என்று கேட்ட நிலையில் கோமதி நாளைக்கு நல்ல நேரம் இருப்பதால் நாளைக்கு நிச்சயதார்த்தத்தையும் கல்யாணத்தையும் பண்ண முடிவு பண்ணியாச்சு என்று சொல்கிறார்.
உடனே பழனிவேலுக்கு வெட்கம் வந்துவிட்டது, அடுத்தடுத்து ஏற்பாடுகளை பண்ண ஆரம்பித்து விட்டார்கள். உடனே கோமதி மற்றும் பாண்டியன் வெளியே கிளம்பும்போது பழனிவேலுவின் அம்மாவிடம் நாளைக்கு கல்யாணத்துக்கு வந்து உங்க பையனை ஆசீர்வாதம் பண்ணி விடுங்க என்று பாண்டியன் சொல்கிறார். அப்பொழுது அண்ணிகளும் வந்த நிலையில் கோமதி நீங்களும் நாளைக்கு கோவிலுக்கு வந்து ஆசிர்வாதம் பண்ண வேண்டும் என்று சொல்கிறார்.
இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சக்திவேல் மற்றும் முத்துவேலு வந்து விடுகிறார்கள். அவர்களுக்கு இருக்கும் கோபத்தில் மறுபடியும் பழனிவேல் கல்யாணத்தில் பிரச்சனை பண்ணி விடுவார்கள் போல தான் தெரிகிறது. ஆனாலும் பழனிவேலுவின் அம்மா யாரு கல்யாணம் பண்ணி வைத்தால் என்ன பழனிவேலுக்கு நல்லபடியாக கல்யாணம் முடிந்தால் சந்தோஷம் என்று யோசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
தயவுசெய்து இந்த கல்யாணத்தை நிறுத்துவதற்கு எந்த முயற்சியும் பண்ணாதீங்க. ஏற்கனவே பழனிவேல் நிச்சயதார்த்தம் நின்று போன நிலையில் அவன் ரொம்பவே உடைந்து போய் விட்டான். மறுபடியும் மறுபடியும் அவனை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று சொல்கிறார். அந்த நேரத்தில் ஊரில் இருக்கும் ஒருவர் உங்க தம்பிக்கு என்ன இருந்தாலும் நீங்க கல்யாணம் பண்ணி வச்சா தான் கெத்தா இருக்கும்.
உங்ககிட்ட பண வசதி இல்லை என்றாலும் கூட பரவாயில்லை ஆனால் எல்லா இருந்தும் உங்க தம்பிக்கு வேற யாரோ கல்யாணம் பண்ணி வைப்பது பார்க்க ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது என்று நல்ல ஏத்தி விட்டு பேசி விட்டார். இதனால் கோபமாக இருக்கும் பழனிவேலுவின் அண்ணன்கள் தம்பியின் கல்யாணம் என்று கூட நினைக்காமல் நிறுத்துவதற்கு சதி பண்ண போகிறார்கள்.
இதனால் மொத்தமாக உடைந்து போகும் பழனிவேலுவுக்கு மிகப்பெரிய ஆறுதலாக பாண்டியன் எடுக்கப் போகும் முடிவு அவருடைய மகள் அரசியை கல்யாணம் பண்ணி வைத்து விடுவார். ஆனால் பாண்டியன் எடுக்கப் போகும் இந்த முடிவால் பழனிவேலுக்காக மட்டும் இல்லாமல் குமரவேல் இடம் இருந்து அரசி தப்பிப்பதற்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கப் போகிறது. அப்படி மட்டும் நடந்து விட்டால் கடைசி வரை குமரவேலு கல்யாணம் ஆகாமல் திரியபோகிறார்.