விடாமுயற்சி படத்தில் அஜித் தன்னுடைய இமேஜ் போய்விடும் என்பதை கூட பார்க்காமல் பல விஷயங்களில் கீழே இறங்கி நடித்துள்ளார். குறிப்பாக மாஸ் ஹீரோ என அந்தஸ்தில் இருக்கும் பல நடிகர்கள் இத்தகைய விஷயத்தை செய்வதில்லை. இதைத்தான் இப்பொழுது விடாமுயற்சி படத்திற்கு பாதகமாக பார்க்கிறார்கள்.
பெரும்பாலும் அஜித் ரசிகர்கள் அவரிடமிருந்து ஒரு மாஸ் என்ட்ரி, ஆக்சன் காட்சிகள் போன்றவற்றைத் தான் விரும்புவார்கள். ஆனால் விடாமுயற்சி படத்தில் அஜித் எல்லோரிடமும் அடி வாங்கியும், கொஞ்சம் கூட ஹீரோயிசம் காட்டாமலும் பல காட்சிகளில் நடித்திருப்பது தான் இப்பொழுது கடும் பேசு பொருளாக மாறி உள்ளது.
வழக்கமான மசாலா படங்களாக இல்லாமல் மலையாள சினிமா போன்று வித்தியாசமான கதை அம்சம் கொண்டது தான் விடாமுயற்சி படம். ஒரு மாஸ் ஹீரோ இந்த மாதிரி படத்தில் நடித்துள்ளார். இது அவருக்கு செட்டாகவில்லை, அதனால் படம் நல்லா இல்லை என்றெல்லாம் சொல்கிறார்கள்.
இதே போல் தான் கமலும் வித்தியாசமான முயற்சி எடுப்பார். ஏற்கனவே அவர் உன்னை போல் ஒருவன், பாபநாசம் , போன்று ஹீரோயிசம் இல்லாத படத்தில் நடித்து வெற்றி பெற்றுள்ளார், ஏன் பாபநாசம் படத்தில் கூட மனைவி மற்றும் மகள்கள் கண் முன்னே போலீசிடமும் அடி வாங்குவார்.
ஏற்கனவே கமல் இப்படி நடித்துள்ளார் ஆனால் அஜித் அடி வாங்கும் காட்சிகளை மட்டும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அஜித்தை மாஸ் ஹீரோ அந்தஸ்தில் பார்த்து வருகிறார்கள். இவர்கள் விரும்பிய அஜித்தை திரையில் பார்க்க முடியாததால் படம் நன்றாக இல்லை என குமுறி வருகிறார்கள்.