Ajith: மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜித் குட் பேட் அக்லி படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வரும் ஏப்ரல் 10 படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
அதே தேதியில் தான் தனுஷின் இட்லி கடை படமும் வர இருக்கிறது. அதனாலயே இந்த போட்டா போட்டியை காண நெட்டிசன்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
இந்நிலையில் குட் பேட் அக்லி படத்துக்காக அஜித் வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. இப்படத்தின் மொத்த பட்ஜெட் என்று பார்க்கையில் 270 கோடியாக இருக்கிறது.
அதில் பாதிக்கும் மேல் அஜித்தின் சம்பளம் அதாவது தயாரிப்பாளர் கணக்கு பார்க்காமல் 163 கோடி சம்பளத்தை தூக்கி கொடுத்துள்ளார்.
அஜித் வாங்கிய முரட்டு சம்பளம்
எல்லாம் போட்ட காசை விட பல மடங்கு எடுத்து விடலாம் என்ற நம்பிக்கைதான். அதேபோல் இயக்குனருக்கு 10 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.
தற்போது விடாமுயற்சி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனாலும் படம் வெளியான இரண்டாவது நாளில் படத்தின் வசூல் 60 கோடியை தாண்டி விட்டது.
அந்த வகையில் குட் பேட் அக்லி மிக பெரும் வசூல் சாதனை செய்யும் என இப்போது சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர். அது மட்டும் இன்றி பிப்ரவரி 14-ஆம் தேதி படத்தின் டீசரும் வர இருப்பது குறிப்பிடத்தக்கது.