திங்கட்கிழமை, பிப்ரவரி 10, 2025

அமரன் பட நாயகிக்கு வலை வீசும் சிம்பு.. அதுக்கு அவங்க சம்மதிக்கணுமே பாஸ்!

Simbu: நடிகர் சிம்பு காட்டில் அதிர்ஷ்ட மழை வானத்தை கிழித்துக்கொண்டு பெய்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

அவருடைய அடுத்தடுத்த படங்களின் அப்டேட்டுகள் தமிழ் சினிமா ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சிக்கு கொண்டு சென்றிருக்கிறது.

சிம்புவுக்கு அடுத்து கமலஹாசனின் தக் லைஃப் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தில் இவர் கமலின் மகனாக நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

அமரன் பட நாயகிக்கு வலை வீசும் சிம்பு

அத்தோடு இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தன்னுடைய ஐம்பதாவது படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தை அவரே தயாரிக்கவும் செய்கிறார். இது வரலாற்று கதையை மையமாக எடுத்துக் கொண்டு எடுக்கப்படும் படம்.

மேலும் சிம்பு தன்னுடைய 51வது படத்தில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து உடன் இணைகிறார். சிம்புவின் பிறந்தநாள் அன்று அவருடைய 49வது படத்தில் அப்டேட் வெளியானது.

இந்த படத்தை பார்க்கிங் படத்தை இயக்கிய இயக்குனர் ராஜ்குமார் இயக்குகிறார். இந்த படத்திற்கு ஹீரோயின் ஆக சாய் பல்லவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அமரன் படத்திற்கு பிறகு ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோயின் ஆகிவிட்டார் சாய்பல்லவி. இவர் பொதுவாக ரொம்பவும் செலக்ட் ஆன கதைகளில் தான் நடிக்கிறார்.

சிம்புவின் 49 வது படத்தில் நடிக்க சம்மதிக்கிறாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending News