Jacqueline: விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்லின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஃபேமஸ் ஆகிவிட்டார். ஆடியன்ஸ் மனதில் நிரந்தர இடம் பிடித்துள்ள இவர் தற்போது ஃபேன்ஸ் மீட், இன்டர்வியூ என பிஸியாக இருக்கிறார்.

அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது இவருக்கும் முத்துவுக்கும் இடையேயான நட்பு வெளியில் காதல் வீடியோக்களாக எடிட் செய்யப்பட்டு பரவியது.
அதை கியூட் என ரசிகர்களும் கொண்டாடினார்கள். வெளியில் வந்து இதை பார்த்த முத்து கூட ஜாக்லின் வேறு ஒருவரை காதலிக்கிறார். எங்களுக்குள் இருப்பது நட்பு என தெளிவுபடுத்தி இருந்தார்.
காதலர் தினத்தில் வெளியான போட்டோ
இருந்தாலும் அந்த வீடியோக்கள் இப்போதும் வைரல்தான். இந்நிலையில் காதலர் தினமான இன்று ஜாக்குலின் தன்னுடைய காதலர் யார் என்பதை போட்டோவுடன் அறிவித்துள்ளார்.
இருவரும் ஒன்றாக இருக்கும் அந்த போட்டோவில் யுவராஜ் செல்வநம்பி என ஹார்ட் போடப்பட்டிருக்கிறது. யுவராஜ் கேமராமேனாக இருக்கிறார்.
உங்க ஜோடி பொருத்தம் நல்லா இருக்கு. விரைவில் கல்யாண சாப்பாடு போடுங்க என இந்த ஜோடிக்கு ரசிகர்கள் இப்போது தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.