350 கோடி ரூபாயில் விடாமுயற்சி படம் எடுக்கப்பட்டது. இந்த படத்திற்கு அஜித் வாங்கிய சம்பளம் 120 கோடிகள். இயக்குனர் மகிழ் திருமேனிக்கு 10 கோடிகளும் ஹீரோயின் திரிஷாவுக்கு 12 கோடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் பிரமோஷன் வேலைகள், அஜர்பைஜானில் நடந்த சூட்டிங் என மொத்தமாக 350 கோடிகளுக்கு மேல் செலவு செய்துள்ளனர்.
விடாமுயற்சி படத்தில் இருந்து லைகா நிறுவனத்திற்கு லாபம் கிடைக்கவில்லை மாறாக இந்த படத்தால் பெரிய நஷ்டம் அடைந்துள்ளனர். ஏற்கனவே இவர்கள் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் லூசிபர் 2 படத்தை எம்பிரான் என்ற பெயரில் தயாரித்து வருகிறார்கள்.
எம்பிரான் படம் 175 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருகிறது ஏற்கனவே 100 கோடிகள் வரை அந்த படத்திற்கு இன்வெஸ்ட்மெண்ட் செய்துள்ளனர் லைகா நிறுவனம். விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகி பெரிய லாபம் அடையும் அதை வைத்து இந்த படத்திற்கு மேற்கொண்டாகும் செலவைபார்த்துக் கொள்ளலாம் என மனக்கோட்டை கட்டி வந்தது லைகா.
இந்த படத்தில் மோகன்லாலுக்கு 15 கோடிகள் சம்பளம் இயக்குனர் பிரித்திவிராஜுக்கு 10 கோடிகள். இப்பொழுது இவர்கள் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். விடாமுயற்சி படத்தை நம்பி எம்பிரான் படத்தையும் இப்பொழுது திராட்டில் விட்டுள்ளார் லைகா ஓனர் சுபாஸ்கரன்.
இப்படி ஹீரோக்கள் சம்பளம் வாங்காமலும், அங்கங்க கிடைக்கக்கூடிய பணத்தையும் வைத்து இந்த படத்தை எடுத்து வருகிறார்கள். படத்தின் மீது மோகன்லால் மற்றும் இயக்குனர் பிரித்திவிராஜுக்கு பெரிய நம்பிக்கை இருக்கிறது. இந்தப் படத்தை மார்ச் 27ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு வருகிறார்கள்.