சனிக்கிழமை, பிப்ரவரி 22, 2025

அவ்வை சண்முகி பட தலைப்பிற்கு பின்னால் இருக்கும் காரணம்.. இதுக்குத்தான் கமலை ஆண்டவர் என்று சொல்கிறார்கள் போல!

Kamal Haasan: நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமாவில் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லலாம். அதில் முக்கியமான ஒன்றுதான் படம் முழுக்க பெண் வேடமிட்டு நடித்த அவ்வை சண்முகி.

இந்த படத்தில் கமல் மீனா வீட்டு வேலைக்கு செல்ல போன் பண்ணுவார். அப்போது உங்க பேர் என்ன என்று கேட்பார்கள்.

சட்டென யோசிப்போம் கமலுக்கு அங்கே சாலையில் உள்ள பெயர் பலகை கண்ணுக்கு தெரியும். அவ்வை சண்முகம் சாலை என்று இருக்கும்.

அவ்வை சண்முகி பட தலைப்பிற்கு காரணம்

இவர் பெண் வேடமிடப் போவதால் தன்னுடைய பெயரை அவ்வை சண்முகி என்று சொல்வார். இவ்வளவு நாள் நமக்கு இந்தப் படத்தின் தலைப்புக்கு இதுதான் காரணம் என்று தோன்றும்.

ஆனால் உண்மையில் இதற்கு பின்னால் அசர வைக்கும் ஒரு காரணம் இருக்கிறது. சினிமாவுக்கு முன்னால் ரசிகர்களை தன் பக்கம் கட்டி வைத்திருந்தது நாடகம் தான்.

அந்த நாடகத் துறையில் பேர் போனவர் தான் டி கே சண்முகம். இவர் பெண் வேடமிட்டு நடித்த அவ்வையார் நாடகம் தமிழகத்தில் அப்போது பட்டி தொட்டி எங்கும் பிரபலம்.

வயதான பெண் கேரக்டரில் நடிக்க வேண்டும். கன்னங்கள் ஒட்டிப் போனால்தான் அந்த மாதிரி தோற்றம் முகத்தில் வரும் என்பதற்காக தன்னுடைய கடைவாய் பற்களையே பிடுங்கிக் கொண்டாராம்.

நாடகத் துறையில் அவர் செய்த அர்ப்பணிப்புக்காகத்தான் கமல் தன்னுடைய படத்திற்கு அந்தப் பெயரை வைத்திருக்கிறார்.

Trending News