Gossip: இளம் வயதிலேயே டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து கவனம் பெற்றார் அந்த நடிகை. அக்கட தேசத்தில் பிஸியாக இருந்த நடிகை இப்போது கோலிவுட் பக்கம் தன் பார்வையை திருப்பிள்ளார்.
தம்பி நடிகருக்கு ஜோடியாக ஒரு படத்தில் இவர் நடித்து வருகிறார். ஏற்கனவே அண்ணன் நடிகருடன் நடிக்க வந்து கடைசியில் அது முடியாமல் போனது.
தற்போது நடித்து வரும் படத்தை அவர் பெரிதும் நம்பி இருக்கிறாராம். ஏற்கனவே ஒல்லி நடிகருடன் ஒரு படத்தில் நடித்துள்ளார்.
அம்மணியின் மாஸ்டர் பிளான்
அப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதேபோல் தம்பி நடிகரின் படமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் கோலிவுட்டில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து விடலாம் என்பது நடிகை எண்ணம்.
அதனால் தன்னை வளர்த்து விட்ட மாநிலத்தில் இருந்து வந்த இரண்டு பட வாய்ப்புகளை கூட அவர் வேண்டாம் என உதறி தள்ளிவிட்டாராம்.
முழுமூச்சாக கோடம்பாக்கத்தில் மையம் கொண்டுள்ளது இந்த இளம் புயல். அம்மணியின் திட்டம் பலிக்குமா என பார்ப்போம்.